பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 நாட்டுப் படலத்திலே ஒரு பாடல். மழை சோவென்று பெய்தது , ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் கிரம்பிவிட்டன , தடாகத்தே மலர்ந்துள்ள தாமரையும் குவளையும் கருத்தைக் கவர்கின்றன ; கன்னியர் தண்ணிரில் மூழ்கிக் குளிக்கின்றனர். இப்பின்னணியிலேஇதோ, ஒரு பெண் நாவல் மரம் கனிந்து குலுங்குகின்றது : அவள் காவில் எச்சில் ஊறுகிறது ; கனியுதிர்க்க மரத்திலே கல் எறிகிருள் ; கனிகள் உதிர்ந்தன ; கனியைச் சுவைக்கும் வேட்கையில்ை கனியொன்றைக் கையில் எடுத்தாள் ; பறந்தது அக்கனி ஆம் இறகை விரித்து இன்ப கீதம் இசைத்துப் பறந்துவிட்டது அவள் கருதி எடுத்த கனி , வியப்பாக இருக்கிறதல்லவா ? ஆனல், கனி பறக்கவில்லை; கனி போன்ற கரிய வண்டே அது , துணுக்குற்ருள் கையை உதறினுள் : மெய் பதறிள்ை : நெஞ்சம் பதைபதைத்து கின்ருள் தரையில் சிந்திக் கிடக்கும் சுவை மலிந்த நாவற் கனிகளைத் தொட்டாளில்லை : காரணம் மருட்சி தந்திடும் மதுகரங்களோ என்ற கலக்கந்தான். இதைச் சொல்லோவிய மாகத் தீட்டிக் களிக்கின்ருர் கவிஞர். மறிந்து துாங்கிய நாவலின் கனியையோர் மங்கை யெறிந்து பார்மது கரத்தினைக் கரத்தின லெடுப்பப் - பறிந்து போதலிற் றுணிக்கின்கை யுதறி.மெய் பதறிச் செறிந்து சூழ்தரச் சொரிந்தமைக் கனியையுங் தீண்டாள். இது போன்றே எழில் மலராக, இனிய கனியாக' இன்பச் சுனையாகப் பல பாடல்கள் உள்ளன, இக்காப்பியச் சோலையிலே. - அருஞ்சொற்பொருள் : துய்த்து-நுகர்ந்து; கன்னல்-கரும்பு; அவை-சபை, களன் ஆக - இடமாக; அபயக்குரல்-காக்கும் சொல்; கவின் ஆர்-அழகு நிறைந்த, மருள்-மயக்கம்; குபிரின் குலம்-இருள் என்னும் கூட்டம்; களங்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/142&oldid=881004" இலிருந்து மீள்விக்கப்பட்டது