பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ஞர்கள். இவ்வாறு அணுவைப் பிளந்து காட்டிய பின்னர் விஞ்ஞானிகள் உலகின் வரலாற்றை அணுவின் ஆற்றலினல் மாற்றியமைக்கலாமென்று எண்ண முற்பட்டனர். ஆட்டோபிரிஷ் என்பவரும், விஸ்மெயிட்கர் என்ற 'அம்மையாரும் யுரேனிய அணுவினைப் பிளப்பதால், மிகுந்த ஆற்றல் வெளிப்படுகிறதென்றும், 1 கிராம் யுரேனியத்தைப் பிளப்பதில் 200,000,000 மின்னணு வோல்ட் வெளிப்படுகிற தென்றும் கூறினர்கள். யுரேனியத்தை நியூட்ரான் உதவியால் தாக்கிப் பிளக்கும்போது மேலும் இரண்டு நியூட்ரான்கள் தோன்றி, அவைகள் இரண்டு அணுக்கருக்களைப் பிளக்க, இரண்டு நியூட்ரான்கள் ஒவ்வொரு பிளப்பிலும் வெளிப் படுகின்றன. இத்தகைய விளைவு, சங்கிலித் தொடர் விளைவு எனப்படும். இவ்வாறு யுரேனிய அணு பிளக்கப்படும் பொழுது பேராற்றல் வெளிப்படுகிறது. s இத்தகைய பேராற்றலினல் அரிய பெரிய காரியங்கள் நடைபெறுவதற்கு ஏதுவுண்டு. நாட்டு மக்களின் வாழ்க்கை வசதிகள், பொருளாதார முன்னேற்றம் முதலியன ஏற்படுவ தற்கு உற்பத்திப் பெருக்கம் அவசியம். உற்பத்தி பெருக வேண்டுமாயின் நாட்டில் விளைச்சல் அதிகப்படுத்தப்பட வேண்டும். தொழில்கள் வளம்பெற்றுப் பெருகவேண்டும். தொழிற் பெருக்கம் ஏற்படுவதற்கு அணுவாற்றல் மிகுந்த அளவில் உதவி செய்யும். அணுவின் ஆற்றலினல் பிரயாணிக் கப்பல்கள், வானவூர்திகள், இரயில்கள், மோட்டார்கள், விண்வெளி இராக்கட்டுகள் முதலியவைகளை இயக்க விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வ ரு கி ன் ற ன ர். இங்கிலாந்து, அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் பல நாடுகளில் அணு ஆலைகளை ஏற்படுத்தி ஏராளமான ஆற்றலைப் பெற்று மக்கள் தொழில் துறைகளில் முன்னேறி வருகின்றனர். நம் இந்தியாவிலும் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் டிராம்பேயில் ஓர் அணுகிலேயம் நிறுவப்பெற்றுள்ளது. அப்சாரா, ஜெர்லின அணுத் திட்டங்களும் நிறைவேறி வருகின்றன. நமது நாட்டிலும் அணு ஆற்றல் குழு அமைக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/147&oldid=881013" இலிருந்து மீள்விக்கப்பட்டது