உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 பெற்றுச் செயற்பட்டு வருகிறது. அணுவாற்றல் குறைந்த செலவில் மக்களுக்குக் கிடைக்க நம் அரசாங்கம் முயன்று வருகிறது. - -- அணுவாற்றல் தக்காரிடம் ஒப்படைக்கப்பட்டால் பல நன்மைகள் ஏற்ப்டும். தகுதியில்லாத மக்களிடம் அணு வாற்றல் சிக்கினல் உலகத்திற்கே மாபெருங்கேடாக அமையும். இரண்டாவது உலகப்போரில் ஹிரோசிமா, நாகசாகி முதலிய ஜப்பானிய நகரங்கள் அழிவதற்கு அணுக் குண்டின் ஆற்றலே காரணம். எனவே அணுவின் ஆற்றலை ஆக்க வேலைகளுக்கே பயன்படுமாறு செய்வது கன்மக்களின் கடமையாகும். அணுவின் ஆற்றலைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, நன்மை பயக்கக்கூடிய முறையில் பயன் படுத்துவோமாக. வினுக்கள் : 1. அணு என்ருல் என்ன ? இதனை யார் எப்பொழுது கண்டு பிடித்துக் கூறினர் ? 2. லார்டு ருதர் போர்டு என்பவர் அணுவைப் பற்றிக் கருதுவது யாது ? - 3. பெக்குரல் என்பார் சோதனையின் முடிவுகள் யாவை ? 4. குயூரி தம்பதிகள் ஆய்ந்து கண்ட முடிவு யாது ? 5. சாட்விக் என்னும் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு யாது ? 6. அணுவாற்றலை எவ்வாறு பயன்படுத்தலாம் ? ஏனைய நாட்டினர் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/148&oldid=881015" இலிருந்து மீள்விக்கப்பட்டது