பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 கட்டுரையின் நோக்கமும் அதுவேயாம். பொங்கல் என்பது முன்பனிப் பருவத்தின் இடைக்காலத்தில் தோன்றும் இயற்கையை ஒட்டி நிகழ்வதொன்று. அ.து இன்னதென அறிய வேண்டுமாயின் அதற்கு முன்னுள்ள பருவங்களையும் அவற்றின் இயல்புகளையும் ஓரளவு தெரிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகும். - ஆறு பருவங்கள் காலம் என்பது எல்லையின்றி விரிந்து, பரந்து நிற்பதோர் அருவப் பொருளாயினும் அக்காலத்தின் வயப்பட்டு ஒழுகும் மக்கள் தங்கள் வாழ்க்கையை வளமுற நடத்துதற் பொருட்டு இயற்கையிற் காணப்படும் ஞாயிறு திங்கள், நாண்மீன் முதலியவற்றின் இயக்கங்களைக் கருவியாகக் கொண்டு, கண்ணிமைப் பொழுதினும் நுண்ணிய பல காலக்கூறு களையும், நாழிகை, நாள், திங்கள், யாண்டு, ஊழியென எண்ணப்படும் மிகப் பெரிய காலக்கூறுகளையும் வரை யறுத்துக்கொண்டனர். அவற்றில் ஞாயிறு தனக்குரிய சிங்கவோ ரைமுதல் திங்களுக்குரிய கடகவோரையீருக உள்ள பன்னிரண்டு ஓரைகளிலும் இயங்கிவரும் கால எல்லையை ஓராண்டு என்றனர். ஓராண்டின் உட்பிரிவாகிய பெரும்பொழுதுகளையும், ஒரு நாளின் உட்பிரிவாகிய சிறு பொழுதுகளையும் ஐந்திணைகளுக்கும் உரிமைப்படுத்துக் கூற வந்த ஆசிரியர் .ெ த ல் கா ப் பி ய ர் 'காரும் மாலையும் முல்லை' எனவும் முல்லை முதலாச் சொல்லிய முறை" எனவும் கார் காலத்தையும் முல்லைத் திணையையும் முதலிற் கூறியிருத்தலால் கார்காலத்தின் தொடக்கமாகிய ஆவணித் திங்களே ஆண்டின் தொடக்கம் எனக் கொள்ளுதல் பொருந்தும். தென் பாண்டி நாட்டிலும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பகுதிகளிலும் ஆவணிமுதல் ஆடியிருக ஓராண்டு கணக்கிடப்பட்டு வருதலும் ஈண்டுக் கருதத் தக்கது. ஆவணி முதலாகக் கொண்ட ஓராண்டுக் காலம் மழைக் காலம், பனிக்காலம், வெயிற்காலம் என ஒவ்வொன்றும் நந்நான்கு திங்களைக்கொண்ட மூன்று பருவங்களாக முன்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/150&oldid=881021" இலிருந்து மீள்விக்கப்பட்டது