பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பகுக்கப்பட்டிருந்தது. அவற்றுள் ஒவ்வொன்றிலும் சிறுசிறு வேறுபாடுகளிருத்தல் கண்டு அவற்றை ஆறு பருவங்களாகப் பிரித்தனர். மழை பெய்யத் தொடங்குதலும், பெருமழை பெய்யினும் இடையிட்டுப் பெய்தலும் ஆகிய தன்மை பற்றி ஆவணி, புரட்டாசியாகிய இரு திங்களைக் கார் காலம் என்றும், அடுத்துள்ள ஐப்பசி, கார்த்திகையாகிய இரு திங்களில் இடையருது மழை பெய்தலும், குளிர் மிகுதியாக இருத்தலும் பற்றி அவற்றைக் குளிர்காலம் என்றும் மழைக் காலத்தை இரு கூருக்கினர். மார்கழி முதலிய நான்கு திங்களும் பனிக்காலமாயினும் ஞாயிறு படும் அந்தி நேரத்தில் பனி வீழ்தலும் இரவின் இறுதி நேரத்தில் பனிவீழ்தலும் ஆகிய வேறுபாடிருத்தல் கண்டு முன்னைய இரண்டு திங்களே முன்பனிக்காலமென்றும், பின்னைய இரு திங்களைப் பின்பனிக் காலமென்றும் பிரித்தனர். இவ்வாறே வெயில் வெப்பத்தின் குறைவு, மிகுதி குறித்துச் சித்திரை முதலிய நான்கு திங்கள் இளவேனில், வேனில் என இரண்டாகப் பகுக்கப்பட்டன. இனி, பொங்கல் வருதற்கு முன்னுள்ள பருவங்களின் இயல்புகள் பண்டைக் காலத்தில் எவ்வாறிருந்தனவென்பதை அக்காலத்தில் .ே த ா ன் றி ய நூல்களின் வாயிலாகக் காண்போம். வேனிற் பருவத்தின் இயல்புகள் == வேனிற் காலத்து வித்திய தினைப் பயிர்கள் வெயில் வெப்பத்தால் வாடுதல் கண்ட குன்றவாணர்கள் மழை பெய்வ தற்காக மலேயுறை கடவுட்குப் பலிதுவி வழிபட்டனர். வழிபாட்டின்பின் மழை மிகப் பெய்தமையால் இனி மழை வேண்டாவென மீண்டும் அக்கடவுளைப் போற்றினர். மழை கின்றமை கண்டு மகிழ்ச்சியுடையராய், விளைந்த தினக் கதிரைக் கொய்து அடிசிலாக்கி அயின்றனர்' என்று மலை நாட்டிலேயே தம் வாழ்நாளிற் பெரும் பகுதியைக் கழித்த கபிலர் கூறியுள்ளனர். இதனை நோக்கும்போது வேனிற்காலம் மழை பெய்தற்குரிய காலம் அன்றென்பதும், கடவுள் வழிபாட்டால் மழை பெய்ததென்பதும் புலனுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/151&oldid=881023" இலிருந்து மீள்விக்கப்பட்டது