பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 கார்ப்பருவத்தின் இயல்புகள் ஆவணி, புரட்டாசியாகிய கார்ப்பருவத்தில் இயல் பாகவே மழைபெய்யத் தொடங்குதலும், பெருமழை பெய்யி னும் இடையிட்டுப் பெய்தலும் நிகழுமென்பது பின்வருவன வற்ருல் அறியப்படுகின்றது. 'முல்லைக் கொடிகளில் கூரிய நுனியையுடைய அரும்புகள் தோன்றவும் தேற்ரு, கொன்றை ஆகிய மரங்களில் பேரரும்புகள் முறுக்கவிழ்ந்து மலரவும் பழுக்கக் காய்ச்சிய இரும்பை முறுக்கி விட்டாற்போன்ற கரிய பெரிய கொம்புகளை யுடைய கலைமான்கள் பரற்கற்களையுடைய பள்ளங்களில் ஓடும் நீரைப் பருகியும், வேனில் வெப்பத்தால் உண்டாய நீர் வேட்கை தணியாமையால் அப்பள்ளங்களை விட்டு விலகாமல் துள்ளித்திரியவும் காடுறை உலகம் நீரில்லாத வருத்தத்தை விட்டொழிக்கவும் மேகம் காற்ருலுங்தப்பட்டு விரைந்து விழும் துளிகளைச் சிதறி அக்காட்டினைக் கார்ப்பருவஞ் செய்தது" என அகப்பாட்டு கூறுகின்றது. இதல்ை கார் காலத்தில் இயற்கையாக மழை பெய்யத் தொடங்கும் என்பது தெரிகின்றது. ஞாயிற்றின் வெம்மையால் வருந்திய பெண் யானை வெள்ளத்திற் படிந்து களிற்றுடன் விளையாடவும் நிலத்திலும் வானத்திலும் நீர் கிறையவும் நாழிகை வட்டிலால் நாழிகை யறிதலின்றி ஞாயிறு உள்ள இடம் அறியப்படாமையால் உலகம் அஞ்சவும், கடல்நீரை முகந்து சூற்கொண்ட மேகம் எங்கும் ப ர ந் து பெருமழை பெய்வதாயிற்று' என அக நானுற்றில் நல்லந்துவளுர் கூறியுள்ளார். இதல்ை கார்காலம் மக்களும் மாக்களும் வரவேற்று மகிழும் வண்ணம் பெருமழை பெய்த்ற்கு உரிமையுடையதென்பது உணரப்படும். குளிர்ப் பருவத்தின் இயல்புகள் , ஐப்பசி கார்த்திகையாகிய குளிர்காலம், விடாது மழை பெய்தலுடன் வாடைக் காற்றும் வீசும் காலமாகும். இக் குளிர்காலத்தின் இயல்பு பற்றிய சொல்லோவியத்தினைக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/152&oldid=881025" இலிருந்து மீள்விக்கப்பட்டது