உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1生生 மலும், நீர் பரந்தொழுகலால் கிலத்தைக் காணுமலும் அல்ல லுற்று வருந்திய மக்கள் பொங்கியெழுந்த வெண்மேகத்தைக் கண்டு, பொங்கல் வந்தது பொங்கல் வந்தது என மகிழ்ந்து, இனி மழை பெய்யாதெனத் துணிந்து இடிந்தும் சிதைந்தும், கழுவாமலும் மெழுகாமலும் பலவாறு பழுதுபட்டுக் கிடந்த தத்தம் இல்லங்களைத் தீற்றியும் திருத்தியும் பூசியும் புதுக்கியும் கழுவியும் மெழுகியும் கோலஞ் செய்திருப்பர். தொழுவங் களில் அடைக்கப்பெற்றும் கட்டப்பெற்றுங் கிடந்த ஆடு மாடுகளைத் திறந்துவிட்டும், அவிழ்த்துவிட்டும் வெளியில் உலவி வரச் செய்திருப்பர். அவற்றைக் குளிப்பாட்டியும் தாம் நீராடியும் மகிழ்ந்து இருப்பர். பழைய மட்கலங்களை மாற்றிப் புதுக் கலங்களிற் பாற்சோருக்கிப் பகுத்துண்டும் இருக்கலாம். ஆனல் இது பற்றிய சிறு குறிப்பாயினும் பழங் தமிழ் நூல்களிற் காணப்படவில்லையென்பதும், பொங்க லென்னும் சொல் உணவிற்குப் பெயராக வழங்கப்படவில்லை யென்பதும் குறிப்பிடத் தக்கன. இங்ங்ணம் பண்டைக்காலத்து நிகழ்ச்சிகள் பலவற்றைக் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் கூறும் சங்க இலக்கியங் களில், தைத்திங்கள் முதல் நாளில் பொங்கலிட்டனர் என்பதற்கும், பொங்கலெனும் சொல் உணவுக்குரிய பெயராக ஆளப்பட்டதற்கும் ஒரு சான்றும் அகப்படாமை வியப்பூட்டு கிறது. அதற்குக் காரணம் அக்காலத்தில் இன்றுள்ள வழக்கம் இல்லையென்பதே ஆகும். ஆயினும், உலகம் உவப்ப வலனேர்புதிரிதரு, பலர்புகழ் ஞாயிறு" என்னும் திரு முருகாற்றுப்படையாலும், ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்னும் சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடலாலும், 'ஆயிரங் கதிராழி ஒரு புறந்தோன்றகலத்தான்' எனும் தொல்காப்பிய மேற்கோட் செய்யுளாலும் பிறவற்ருலும் ஞாயிற்று வாழிபாடு பண்டு தொட்டிருந்தது என்பது தெரிகிறது. வாம்க வளர்க ! سمي" காலந்தோறும் பழைய சொற்கள் மறைந்து புதிய சொற்கள் தோன்றுதலும், ஒரு பொருளை யுணர்த்தியசொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/155&oldid=881032" இலிருந்து மீள்விக்கப்பட்டது