பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* = 145 அப்பொருளை விட்டுப் பிறிது பொருளுணர்த்தி கிற்றலும் இயல்பாதல்போல, ஒருகாலத்தில் நடைபெற்ற வழக்க ஒழுக்கங்களிற் சில மற்ருெரு காலத்தில் மறைந்து போதலும் மாறுபடுதலும் புதியன சில தோன்றுதலும் இயல்பேயாம். தைத்திங்கள் முதல்நாளில் பொங்கலிடுதலும், பொங்க லென்னுஞ் சொல் உணவை உணர்த்துதலும் பண்டைக் காலத்தில் இல்லையாயினும் அவ்விரண்டும் இன்றைய வழக்கில் இடம்பெற்று நிலைத்து விட்டன. அவற்றை மாற்றவும் மறைக்கவும் முடியாது. இப்பொங்கல் விழாவால் விடுகள் புனிதமடைகின்றன. மஞ்சளும் இஞ்சியும் கன்னலும் கதலியும் நாட்டி மாவிலைத் தோரணங்கள் கட்டி மனையை மக்கள் அழகு செய்கின்றனர். புத்தாடையுடுத்துப் புதுக் கலங்களிற் பொங்கலிடுகின்றனர். நன்றி மறவாமைக்கு அறிகுறியாக ஞாயிற்று மண்டிலத்திற்குப் படைத்துத் தாமும் உண்டு பிறர்க்கும் வழங்கி உள்ளக் கிளர்ச்சியும் உவகையும் உறுகின்றனர். இதனை, உழவர் விழா, தமிழர் விழா, தமிழ் விழா என எப்பெயரிட்டழைப்பினும் குற்றமில்லை. குலம், மதம், கொள்கை முதலிய வேறுபாடின்றி நாடு முழுவதும் இவ், விழா கொண்டாடப் பெறுகின்றது. ஆதலின் இப்பொங்கல் விழாவை வரவேற்று வாழ்க வளர்க என வாழ்த்துவோமாக ! | அருஞ்சொற்பொருள் : தீற்றியும் - வண்ணம் பூசியும்; கன்னற்கட்டி - வெல்லம் வழங்கிகொடுத்து, அருவம் - உருவமில்லாதது; நாண் மீன் - வி ண் լհ ன்; நாழிகை - 24 மணித்துளிகள் (கிமிடம்); ஊழி - பல ஆண்டுகள் கொண்ட கால எல்லை; ஒரை - இராசி, ஞாயிறு படும் அந்தி - கதிரவன் மறையும் மாலை; முன்னைய இரண்டு திங்கள் - மார்கழி, தை, பின்னேய இரு திங்கள் -மாசி, பங்குனி; வித்திய - விதைத்த; குன்றவாணர்கள்மலைவாழ் மக்கள்; அடிசில் - உணவு, அயின்றனர் - உண்டனர்; தேற்ற - ஒருவகை மரம்; உந்தப்பட்டு-தள்ளப்பட்டு, இனிது உறையும்இன்பமாக வாழும்; இரை - உணவு, கன்னல் - கரும்பு, கதலி-வாழை, முளை - சுவரில் அடிக்கப்படுவது. வினுக்கள்: 1. இயற்கை விழாவாகிய பொங்கல் விழா எவ்வாறு கொண்டாடப்பெறுகிறது ? и

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/156&oldid=881034" இலிருந்து மீள்விக்கப்பட்டது