பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 அமர்ந்து கண்டு களித்தமையும் குறிப்பிடத் தக்கது (கைதட்டல்). திரைப்படக் காட்சிகளைக் கண்ணரக் கண்டும். உரையாடல்களையும், பாடல்களையும் செவியாரக் கேட்டும் சிந்தை களிகூரும் நிலையை அடைகின்ருேம். ஆகவே, கட்புலனுக்கும் செவி ப் புல னு க் கும் ஒருசேர இன்பம் உண்டாத்குகிறது திரைப்பட்ம் என்பதை உணர்கிருேம். பள்ளிகளில் படக்காட்சியும் ஒரு பாடப் பகுதியாகச் சேர்க்கப் பட்டிருப்பதிலிருந்தே அதனல் விளையும் நன்மைகளைத் தெற்றென உணர்கின்ருேம். கற்றவர் மட்டுமே புத்தகங்களைப் படித்துணர முடியும்; சிலர் மட்டுமே சொற்பொழிவைக் கேட்டு மகிழ முடியும்; இசையும் அவ்வாறே. ஆல்ை திரைப்படத்தை கற்ருரும் மற்ருரும் ஆயிரக்கணக்கான வராகக் கூடியிருந்து, ஒரே நேரத்திற் க ண் டு க ளி க் க வாய்ப்புண்டு. புத்தகம் ஒருவரால் எழுதப்படுவது; சொற் பொழிவு ஒருவரால் நிகழ்த்தப்பெறுவது; இசை ஒருவரால் இசைக்கப் பெறுவது; திரைப்படக் கலையோ பலருடைய அறிவால், கூட்டுறவால் உருவாவது. ஆதலின் பலருடைய அறிவாற்றலையும் ஒருங்கே பெற்று மகிழத் திரையரங்கு துணை புரிகிறது. பொழுதை நன்முறையிற் கழிக்கப் பேருதவி செய்கின்றது. மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகளைப் படக்காட்சிகளின் வாயிலாகத் தெளிவாகவும் எளிதாகவும் அறிந்துகொள்ள முடியும், மாணவர்களுக்கு மட்டுமன்று, பொதுமக்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது. திரைப்படத்தைப் பொதுமக்கள் புத்தகம்' என்றே கூறலாம். நேரிற் சென்று காணவியலாப் பொருள்களை, இடங்களைப் படக்காட்சிகளின் வாயிலாகக் கண்டு பயன் பெற முடியும். அயல் நாட்டுப் பழக்க வழக்கங்களையும் நிகழ்ச்சிகளையும் அறிந்துகொள்ள அது வாய்ப்பளிக்கிறது. இவ்வாறு திரைப் படம் பல்லாற்ருனும் நன்மையே விளைத்து வருகிறது என்பது வெள்ளிடைமலை என மொழிந்து விடை பெறுகிறேன். El EURUTHR 5 LD), ஆராவமுதன்: சமன் செய்து சீர் தூக்கும் நடுவர் அவர்களே, அ றி வூ ட் டு ம் பரம்பரையினரே, உடன் பயில்வோரே, அனைவர்க்கும் என் வணக்கம். நன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/159&oldid=881041" இலிருந்து மீள்விக்கப்பட்டது