பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 எனப் பேசிய நண்பர், தமக்கே உரிய முறையில், உங்கள் மனத்தை ஈர்க்கச் சொல்வலை வீசினர். ஆனல் மாணவர் நிலைசாயவில்லை. திரைப்படத்தால் விளைவது தீமையே என அழுத்தமாகவும் திருத்தமாகவும் ங்ான் கூற விரும்புகிறேன். நன்மை எனப்பேசியவர் பள்ளியிற் காட்டப்படும் கல்விப் படக்காட்சியைக் கூறுகிருரா ? அரங்குகளிற் காட்டப்படும் கதை தழுவிய காட்சியைக் கூறுகிருரா ? என்பதே புரிய வில்லை. இரண்டையுமே குழப்புகிருர் (கைதட்டல்). இரு புலனுக்கும். நன்மை தருகிறது என்றும் குறிப்பிட்டார். இது முழுப்பொய். இளஞ் சிருரும் இன்று மூக்குக் கண்ணுடி போடுகின்ற நிலைக்கு வந்துவிட்ட நிலை எதல்ை வந்தது? திரைப்படத்தாலல்லவா ? நண்பர் கண்ணுடி போட்டிருக் .கிருர் என்பதற்காகக கூறவில்லை (கைதட்டல்). உண்மை நிலையை விளக்கினேன். காலம் பொன் போன்றது என்பர். அப்பொன்னை காலத்தை, ஆயிரக்கணக்கான மக்கள், நாடோறும் பாழ்படுத்தி வருகின்றனர். மேலும் காசுங் கரியாகிறது. ஒருவரை யொருவர் அடித்துக்கொண்டும் இடித்துக் கொண்டும், முட்டிக் கொண்டும் தள்ளிக் கொண்டும் சீட்டு வாங்க முனைகின்றபொழுது எத்துணை இழப்புக்கள் நேரிடக் காண்கின்ருேம். வரிசையில் கின்று ஒழுங்குறச் செல்லும் பண்பைக் குலைத்து விடுகிறது. பொது மக்கள் புத்தகம்' என்று அவர் குறிப்பிட்டார். அது பொது மக்கள் பண்பாட்டைக் குலைக்கும் புதுக்கருவி என்றே நான் கூறுவேன். புத்தகத்தைக் கற்பதால், சொற்பொழிவைச் சுவைப்பதால், இசையைக் கேட்பதால் கெட்டார்கள் என இதுவரை கேள்விப்பட்டதேயில்லை. ஆனல் திரைப்படத்தால் தீமை பெருகிப் பரந்து விரிந்து வருவதை நம் மாணவர் களுடைய தோற்றமும் ஒப்பனையுமே தெள்ளத் தெளிய விளக்கி நிற்கின்றன. தலையலங்கோலம், ஆடைக்குறைப்பு இவற்றில் நம் மாணவர்தம் மாண்பு எங்கே (கைதட்டல்). நகைச் சுவைக்காக நான் இதைக் கூறவில்லை. நாட்டின் போக்கைக் கண்டு, மனம் நைந்து கூறுகின்றேன். திரைப் படத்தால் சமுதாயமே சீரிழந்து வருகிறது என்பதைத் தாழ்மையுடன் வற்புறுத்திக் கூற விழைகின்றேன். நேரிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/160&oldid=881045" இலிருந்து மீள்விக்கப்பட்டது