உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கருத்துப் புரட்சியுண்டாக்கிய இங்கர்சால் போல, உங்க ளிடத்தும் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கி விட்டார் நம் பள்ளி இங்கர்சால். திரைப்படத்தை உருவாக்குவோரால் தான் தீமைகள் விளைகின்றன என்ற கருத்தை நண்பர் வலியுறுத்திக் கூறினர். நான் அதை வரவேற்கிறேன். நன்மையினும் தீமையிற்ருன் மனிதன் மனம் அழுந்தப் படிகின்றது. மனிதன் குறைவுடையன் என்பது தத்துவம். ஆகவே அவல்ை உருவாக்கப்படுவது எவ்வாறிருக்கும் என்பதை நீங்கள் நன்கு உணர்வீர்கள். மக்கள் மனத்தை எளிதிற் கவர வேண்டும் அஎன்பதற்காக எவ்வெவ்வாருே அவன் உ ரு வா க் கி விடுகிறன். ஊதியம் ஒன்றே அவன் குறிக்கோள். அதனல் குறைகள், தீமைகள் மலிந்து வி டு கி ன் ற ன. மக்கள் உள்ளத்தை மேலும் எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து விடுகிருன் மனிதன். ஒருகால், இறைவனே வந்து திரைப்படத்தை இயக்குவாராயின் குறையில்லாமல் எடுக் கலாம். அதுவரை தீமைகளே பரவிவரும். இஃது அறிவியல். அறிஞராற் கண்டுபிடிக்கப்பட்டது என்று நண்பர் கூறினர். அறிவியற் புலவன் கண்டுபிடிப்புக்கள் அத்துணையும் கல்லன. என்பது அவர் துணிபுபோலும். உலகத்தையே ஒரு நொடியில் அழித்துப் பாழ்படுத்தும் அணுக்குண்டு, நீரகக் குண்டு, நச்சுத்திரவம் முதலியன வெல்லாம் அவன் உழைப்பால் உருவானவைதாம். இவை நல்லன என்று கூறிவிட முடியுமா? தீ இயற்கைப் பொருள். திரைப்படம் செயற்கைப் பொருள். இயற்கையில் ஆக்கமும் அழிவும் இருக்கலாம். ஆனால், செயற்கையில் நன்மை யொன்றே இருத்தல் வேண்டும். தீமையிருப்பது தகாது. திரைப்படத்தில் தீமைதான் விஞ்சி நிற்கின்றது. ஆதலால் திரைப்படத்தால் விளைவது தீமையே என்று துணிந்து கூறுவேன். அனைவரும் இதனையே ஒப்புவர் எனக் கூறி அமர்கிறேன். வணக்கம். தலைவர் முடிவுரை : ஆசிரிய ந ண் ப ர் க ளே, செவிச் செல்வத்தின் செவ்வியறிந்தொழுகும் செம்மல்களே, திரைப் படத்தால் விளைவது நன்மையே என இருவரும், தீமையே என இருவரும் சொற்போர் புரிந்ததை நாம் கேட்டு மகிழ்ந்தோம். அறிவுடைங்ம்பி, ஆராவமுது, இங்கர்சால், ஈசுவர மூர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/163&oldid=881051" இலிருந்து மீள்விக்கப்பட்டது