உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 இந்நால்வரையும் நான் மிகுதியும் பாராட்டுகின்றேன். அந்நால்வர் பெயரிலும் முதலெழுத்துக்கள் அ, ஆ, இ, ஈ என நெடுங் கணக்கு முறைப்படி அமைந்திருப்பதுபோலவே அவர் தம் பேச்சும் முறைப்படி இயல்பாகவே அமைந்திருக்கக் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். நன்றின்பால் உய்ப்பது அறிவாகலின், மனிதன் நன்னெறியில் அறிவைச் செலுத்து வானேல் நன்மை விளையும்; தி நெறியிற் செலுத்தின் தீமையே விளையும். இரு சாராரும் இருத்தலினல் இற்றை நாளில் திரைப்படத்தால் இரண்டையுமே காண நேரிடுகிறது. செயற்கரியன செய்து அரிதின் உருவாக்க வேண்டிய பல நன்மைகளை எளிதில் திரைப்படத்தால் உருவாக்கி விடலாம் என்பதை நாம் முதலில் மனத்தில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். சமுதாயச் சீர்திருத்தத்தைத் திரைப்படம் செய்து வருவதுபோல் எதலுைம் செய்துவிட முடியாது. ஆயினும் சில குறைகள் இல்லாமலும் இல்லை. பொருந்தா உடை, உரைக்க முடியா ஒப்பனை, கருத்தில்லாக் கற்பனை, இழிநிலைக் காட்சிகள் இவைபோல்வன குறிப்பிடத்தக்கன. இவற்றைக் கொண்டு அக்கலையையே குறை கூறுதல் கூடாது. குறை நம்முடையதே. தி ைர ப் ப ட த் ைத உருவாக்குவோரும் வரவேற்போரும் நாடு, மொழி, பண்பு, அறிவு, அறம் இவற்றை அடிப்படையாக, முதன்மையாக மனத்திற்கொள்ள வேண்டும். பொருளையும் இன்பத்தையும் இரண்டாவதாகத் தான் கருதுதல் வேண்டும். இங்கிலை உருவாகிவிடின் நன்மை ஒன்றையே விளைவாகக் காணமுடியும். ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருப்பதுபோல எதிலுமே நன்மை தீமை இருப்பது இயல்பு. தீது ஒரீஇ நன்று கோடலே அறிவுடைமையாகும். திரைப்படம் பொதுமக்கள் புத்தக மாகத்தான் இருக்கவேண்டும். அவ்வாறிருக்க வேண்டு மால்ை படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், அறிஞர்கள், சான்ருேர்கள் இத்துறையில் அக்கறை காட்ட வேண்டும். அக்கறை காட்டுவரேல் நன்மையா தீமையா என வாதிட வேண்டுவதில்லை. நன்மையே என அ று தி யி ட் டு க் கூற முடியும் எனக்கூறி, என் நன்றியையும் மகிழ்வையும் புலப்படுத்திக்கொண்டு இடம் பெயர்கிறேன். வணக்கம். §

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/164&oldid=881053" இலிருந்து மீள்விக்கப்பட்டது