உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 செயலாளர் நன்றி : எங்கள் அழைப்பிற் கிணங்கி இவண் போந்து, தலைமை தாங்கி, நடுவர் இடத்தை அணி செய்த பேராசிரியர் அவர்கட்கும், கூட்டத்திற்கு வருகை புரிந்த பள்ளித் தலைவரவர்கட்கும் ஏனைய ஆசிரியர் கட்கும் சொற் போர் நிகழ்த்திய மாணவ நண்பர்கட்கும் மற்றையோர்க்கும் மன்றத்தின் சார்பாக B ன் றி ைய யு ம் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். வணக்கம். i அருஞ்சொற்பொருள்: எல்லீர்க்கும் - உங்கள் அனைவர்க்கும்; ஒருபாற்கோடா-ஒருபக்கம் சாயாத; சின் ஞள் - சிலநாள்; சிருர் - சிறுவர்; கண் துஞ் சாது - உறங் காது; ஓம்புதல் - காத்தல்; விஞ்சி - மிகுந்து, செவ்வி - தன்மை; ஒரீஇ - நீக்கி, கோடல் - கொள்ளுதல்; இவண் - இங்கு. வினுக்கள் : 1. திரைப்படத்தால் விளைவது நன்மையே என்பதை அறிவுடை நம்பி எவ்வாறு நிறுவுகிருர் ? 2. திரைப்படம் பண்பாட்டைக் குலைக்கும் புதுக்கருவி என்பதற்கு ஆராவமுது தரும் விளக்கம் என்ன ? - 3. திரைப்படத்தால் சமுதாயம் எவ்வாறு சீர்கேடடைகிறது ? 4. ஆராவமுதுக்கு இங்கர்சால் தரும் மறுப்புரைகள் யாவை ? 5. திரைப்படத்தால் விளையும் நன்மைகளை இங்கர்சால் எவ்வாறு எடுத்தியம்புகிருர் ? 6. திரைப்படத்தில் தீமைகள் மலிந்து வருவதற்கு ஈசுவரமூர்த்தி காட்டும் காரணங்கள் யாவை ? 7. அறிவியற் புலவர் கண்டுபிடிப்புக்களிலும் தீமை உண்டு என்பது எவ்வாறு கிலைநாட்டப்படுகிறது ? 8. திரைப்படத்தைப்பற்றித் தலைவர் கொண்ட கருத்துக்கள் யாவை ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/165&oldid=881055" இலிருந்து மீள்விக்கப்பட்டது