பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 பேசியுள்ளனர். அடிகள் கிறைகுடம் ஆதலின், சங்கப் புலவரை ஒத்திருந்தார். தம்போன்ற புலவர்களை அவர்களது முயற்சியில் ஊக்கித் தம்மால் இயன்ற உ த வி க ளே ச் செய்துள்ளனர். நவநீதகிருஷ்ண பாரதியார் என்பவர் பாடிய பாக்களை உலகியல் விளக்கம்' எனப் பெயரிட்டுத் தாமே அதற்கு வாழ்த்துப் பதிகமும் வலிந்து தந்து அச்சிடுவித்து வெளிப்படுத்தினர். அந்நூற் பாக்களை ஆ ங் கி ல த் தி ல் வரைந்து பாரதியார் புகழையும் ப ர ப் பி ன ர். இந்த உண்மையை நவநீதகிருஷ்ண பாரதியாரே ஒரு கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார். "என்து யாழ்நூலை அச்சிட அன்பர் ஒருவர் விரும்பு கிருர்' என்று அடிகள் தம் நண்பர் ஒருவரிடம் குறிப்பிட்டார். அந்த நண்பர், தாங்கள் அன்பர். சிறந்த படிப்பாளிபோலும்!" என்ருர். அடிகள், அந்த அன்பர் பெரிய படிப்பாளியல்லர்: ஆயின் தமிழ் ஆர்வம் மிக்கவர்; நற்பண்புகள் பெற்றவர்; பெருஞ்செல்வர். தமிழ் நாட்டிலும் ஈழ நாட்டிலும் தமிழ் கற்ருர் பலருள்ளும் காணப்படும் பெருங்குறை ஒன்றுண்டு. அ.தாவது, பிறரிடம் நலன் எதுவும் காண விரும்பாமை ஆகும். அவர் பிறர்பாலுள்ள கலன்களைக்கண்டு பொருமை கொள்கின்றனர்; வெளியில் உதட்டளவில் புகழ்கின்றனரே தவிர உளமாரப் புகழ்வதில்லை. இதல்ை புலவர்கள் தம்முள் மன ஒற்றுமையின்றிச் சிதறுண்டு சிறப்பிழந்து தவிக்கின் றனர்' என்று மிகுந்த வருத்தத்துடன் கூறினர். ஏழை பங்காளர் அடிகள் ஏழைகளிடம் எல்லையற்ற அன்பு கொண்டவர்; அவர்கள் முன்னேறத் தம்மால் ஆயினவெல்லாம் செய்து வந்தவர். அநாதை மாணவர் பலர் அவரால் கல்வியறிவு பெற்று நன்னிலையில் இருந்து வருகின்றனர். அடிகள் தாழ்த் தப்பட்ட மக்களிடம் பேரன்பும் கழிவிரக்கமும் கொண்டவர். அவர்கள் கல்வியறிவு பெறத் தம்மால் இயன்றவெல்லாம் சலியாது செய்தார். அண்ணுமலை நகருக்கு அருகில் இருக்கும் சேரியில் அவர் செய்த தொண்டு கொண்டே அவர் 'ஏழை பங்காளர்' என்று கூசாது கூறலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/168&oldid=881062" இலிருந்து மீள்விக்கப்பட்டது