பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 சமயப் பற்று விபுலானந்த அடிகள் சைவசமயத்திற் பெரும் பற்றுக் கொண்டவர். சைவ மடங்களிடம் தொடர்பு கொண்டவர். திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், சூரியனர் கோவில் ஆதீனங்கள் அவரைப் பெ ரு ைம ப் ப டு த் தி ன: அடிகளது யாழ்நூல் ஆராய்ச்சிக்கு வேண்டிய ஏட்டுச்சுவடி களை உதவின் அடிகள்" சைவ சித்தாந்த சாத்திரங்களில் நல்ல பயிற்சியுடையவர். சைவ சித்தாந்த ஆண்டுவிழாக் கூட்டங்களில் தலைமை வகித்த பெருமை அவருக்கே உரியது. அவர் மதுரை மீட்ைசி அம்மன்மீது பெரும் பக்தி கொண்டவர். தாம் சொற்பொழிவாற்றுவதற்குமுன் கடவுள் வாழ்த்தாக மீட்ைசியம்மை பிள்ளைத்தமிழில் உள்ள ஒரு பாடலை அவர் பாடுவது வழக்கம். அடிகள் தில்லைக் கூத்தப்பிரானிடம் எல்லையற்ற பக்தி கொண்டவர்; இந்தியாவில் இருந்த காலங் களில் எல்லாம் தில்லைக்குச் சென்று சிலநாள்கள் தங்கி நடனப் பெருமானைத் தரிசிப்பது வழக்கம். சைவர்க்குத் தில்லை சிறந்த தலமாதல்போல, வைணவர்களுக்குச் சீரங்கம் சிறந்த பதியாகும். அங்கே கார்முகில் வண்ணன் கிடந்த கோலத்திற் காட்சி அளிக்கிருன். நமது அடிகட்கு அப்பெரு மானிடத்தும் ஈடுபாடு இருந்தது. கற்ருரைப் போற்றல் : 'கற்றலிற் கற்றரை வழிபடுதல் நன்று என்று நமது அடிகள் அடிக்கடி கூறுவது வழக்கம். அப்பெரியார் சிறந்த தமிழ்ப் புலவர்களாகிய சுன்னகம் குமாரசுவாமிப் புலவர், டாக்டர். உ. வே. சாமிநாதையர், வெ. ப. சுப்பிரமணிய முதலியார், மறைமலை அடிகள் முதலிய பெருமக்களிடம் மிக்க அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார். தமிழை நன்ருகப் படித்த இப்பெருமக்களை நீங்கள் யாத்திரையாகச் சென்று தரிசிக்க வேண்டும்; அவர்களுடன் சிறிது நேரம் பேசுவது பல நூல்களைப் படித்து அறிவதற்கு ஒப்பாகும்' என்று அடிகள் தம் மாணவர்க்கும் ஈழநாட்டு நண்பர்கட்கும் கூறியுள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/169&oldid=881067" இலிருந்து மீள்விக்கப்பட்டது