உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 எல்லாரிடத்தும் அன்பு அடிகள் எல்லாச் சமயத்தினரையும் நண்பராகப் பெற்றிருந்தார். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள், சைவர், வைணவர் முதலிய அனைவரும் அவரை நேசித்தனர்; அவருடன் அளவளாவி மகிழ்ந்தனர். அடிகள் அவ்வச் சமயத்தாருடன் அவரவர் சமயத் தொடர்பான செய்திகளைப் பேசி மகிழ்விப்பது வழக்கம்; அவற்றுடன் சமரச சன்மார்க் கத்தைப்பற்றியும் பேசுவார்; இந்த ந ண் பர் க ளு ட ன் பேசுகையில் சாதி வேறுபாடுகள் இந்து சமய பலத்தைப் போக்கி வருவதை நன்கு விளக்கிக் கூறிச் சமய ஒற்றுமைக்கு எல்லாரும் பாடுபட வேண்டும் என்று கூறி வற்புறுத்துவார்; “உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதை உறுதிப்படுத்தும் அளவுக் கருவி ஒழுக்கமே தவிரப் பிறப்பன்று' என்று கூறுவார்; காட்டில் உள்ள சாதிச் சண்டை, மதச் சண்டைகள் ஒழிந்து மக்கள் முன்னேறும் நாள் எந்நாளோ என்று அடிக்கடி கூறி வருந்துவார். முடிவுரை = --- அடிகளது வாழ்வு தியாக வாழ்வு; அவர் துறவியாக இருந்தார். க ல் வி. க் கு ம், சமயத்துக்கும், தமிழுக்கும் தொண்டாற்றினர்; தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகட்கு ஆசிரியராக இருந்தார்; தமிழ் ஆராய்ச்சி நூல்கள் எழுதினர்; கருத்தை ஈர்க்கத்தக்க கட்டுரைகளை வெளிப்படுத்தினர்; ஏழை பங்காளராய்த் திகழ்ந்தார்; நாடெங்கும் சொற்பொழி வாற்றி மக்கட்குத் தமிழ்ப் பற்றையும், சமயப்பற்றையும் வளர்த்தார்; தொண்டு செய்யவே பிறவி வேண்டும்' என்றர். இராமகிருஷ்ண மடத்து அடிகளுள் தமிழ் மொழிக்குப் பாடு பட்ட முதற் பெரியார் விபுலானந்தர் என்றே கூறலாம். அப்பெரியாரைப் பெற்றெடுத்த ஈழநாட்டுக்கு நமது நன்றி உரியதாகுக! அவரது தியாக வாழ்வு நமக்கு நல்வழி காட்டுவதாகுக. அருஞ்சொற்பொருள் : திரிபு - ஒன்றை மற்ருென்ருகக் க ரு து த ல் , அற - நீங்க : வழுக்கி வீழ்வதை - தவறிச் செல்வதை பரிதாபம் - இரக்கம் , த-சோ-22 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/170&oldid=881072" இலிருந்து மீள்விக்கப்பட்டது