உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. மனேக்கலை கலைஞர் திருமதி வி. பெரிய நாயகி அம்மையார் கலையுணர்ச்சி விடுகள் அனைத்திலும் கலை காணப்படுகிறதா ? வீட்டிலே கலையுள்ளம் படைத்த ஒருவர் இருந்து கலையை உணர்ச்சி குன்றமல் பிறருக்கு வெளிப்படுத்தும் நிலையில் வாழ்ந்தால் தான் கல்யைக் காணலாம். மனிதன் இறைவனகிய கலைஞ ல்ை படைக்கப்பட்டவன். அவன் கலையுள்ளம் படைத்தவ ளுகவே இருக்கவேண்டும். எல்லாருக்கும் கலையைப் பெருக்க வழியுண்டு. ஆனல், சோம்பல், சோர்வு என்னும் கெட்ட பழக்கங்கள் மக்களின் உள்ளத்தில் கலையுணர்ச்சியை அவித்துவிடுகின்றன. ஆகையால்தான் கலை சில வீடுகளில் மிளிர்கின்றது. சில விடுகளில் காணப்படுவதில்லை. விட்டின் அமைப்பில் கலை வீட்டின் அமைப்பிற் கலையை எந்தெந்த நிலையிற் காணலாம் எ ன் ரு ல், வீட்டினுடைய உயரத்திலோ, பருமையிலோ அன்று என்று கூறவேண்டும். கம்பீரமான தோற்றத்திலே கவர்ச்சியான அமைப்பிலே கலையைக் காணலாம். அது பெரும்பாலும் கட்டுபவனுடைய கலே உள்ளத்தைப் பொறுத்திருக்கிறது. விட்டின் அறைகள் விட்டினுட் காணப்படும் கலைக்கு வீட்டுத் தலைவன் அல்லது தலைவி பொறுப்புடையர். சிறப்பாகத் தலைவிதான் பொறுப்பாளி என்றுகூடச் சொல்லலாம். முதலாவதாக விட்டின் அறைகளைச் சரியான முறையில் தேர்ந்தெடுக்கலாம்: அதுவும் அவசியம். ஆனால், கலை அதில் இருக்க முடியாது. தேவையைப் பூர்த்தி செய்வதோடு எந்த அழகுணர்ச்சியுடன் தேர்ந்து கொள்ளப்படுகிறதோ அந்த உணர்ச்சி எதிரொலி ஆகும் முறையில் அறைகள் அமைதல் வேண்டும். ஒருத்தி தன் நெற்றியிலே பொட்டிட்டுக் கொள்கிருள். அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/172&oldid=881075" இலிருந்து மீள்விக்கப்பட்டது