பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 "எவ்வழி கல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்ற பாட்டின் கருத்தை உனக்கு முன்பே விளக்கிக் கூறி யிருக்கிறேன். அல்லவா ? நான் மட்டும் ந ல் ல வ ஞ த இருந்தாற் போதுமா ? மாணவர் அனைவருமல்லவா ஒழுக்கம் உடையவராக, நல்லவராக இருத்தல் வேண்டும் என்று : நினைக்கலாம். ஆம்; அனைவரும் நல்லவராதல் வேண்டும் என்பதே என் அவா. அனைவரும் நல்லவராவதற்கு ஆசிரியர் களே மட்டும் நம்பிக்கொண்டு, பெற்ருேர் வாளா விருந்து விடுதல் கூடாது. அத்தனை மாணவர்களையும் ஒருவரே திருத்தல் இயலாது. அதல்ை ஒவ்வொரு பெற்ருேரும் தத்தம் பிள்ளைகளைத் திருத்த முற்பட வேண்டும். பெற்ருேர் ஒவ்வொருவரும் ஆசிரியராதல் வேண்டும். அஃதாவது மக்களைத் திருத்தும் பணியில் அவர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்பது கருத்து. அவ்வாறு முயன்ருற்ருன் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முடியும். இக்கருத்துக் கொண்டே நானும் ஆசிரியருக்கு மட்டும் அத்தனை பொறுப் பையும் விட்டுவிடாமல் உனக்கு அடிக்கடி இவ்வாறு எழுதுகிறேன். நீ எந்த மாணவரோடும் பகையுணர்ச்சி கொண்டு பழகாதே. இற்றை நாளில் பகையுணர்ச்சி வளர்வதற்குரிய சூழ்நிலைகளே இருந்துவரக் காண்கின்ருேம். சாதி, சமயம், அரசியல் முதலிய எத்துறைக் கொள்கைகளிலும் பகைமை யுணர்வே தலைதுாக்கி நிற்கிறது. அப்பகையுணர்வு கூடவே கூடாது. கருத்து வேறுபாடு இருக்கலாம்; ஆல்ை, மாறுபாடு இருத்தல் ஆகாது. நாங்கள் படிக்குங் காலத்தில் சாதி, மதம், அரசியல், கொள்கை இவற்றல் வேறுபட்டவர்கள் எவ்வளவோ பேர் கலந்து ப டி த் .ே தா. ம். ஆயினும் எங்களிடையே பகையுணர்ச்சி தோன்றியதேயில்லை. நாங்கள் பழகும் முறை அவ்வாறிருந்தது. நம் நாட்டுத் தலைவர்கள் சொற்களை, வரலாறுகளைக் கேட்கும்பொழுதும் படிக்கும் பொழுதும் நாமும் அவ்வாறிருத்தல் வேண்டும் என்று விழைவு கொள்ள வேண்டும்; உறுதி பூணவேண்டும். தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனரைப் பற்றி உன்னிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/188&oldid=881108" இலிருந்து மீள்விக்கப்பட்டது