பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பன்முறை சொல்லியிருக்கிறேனல்லவா ? அப்பெரியார் மற்ருெரு பெரியாரைப் பற்றிக் கு றி ப் பி டு ம் .ெ ப ா ழு து "அவர்க்கும் எனக்கும் இடையே மலை போன்ற கருத்து வேற்றுமையுண்டு; ஆனல் நாங்கள் சந்திக்கும்பொழுது, எங்கள் நட்பில் அந்த மலை மறைந்து விடும், எனக் குறிப்பிட் டுள்ளார். இதுதான் பெருந்தன்மையாகும்; தமிழ்ப் பண்பாடும் ஆகும். இம்முறையில் நீயும் தமிழ்ப் பண்பாட்டுக்கு ஊறு நேராவண்ணம் பழகு; பகையுணர்வை விடு. பற்ரு மாக்கள் தம்முடன் ஆயினும் செற்றமுங் கலாமும் செய்யா திரு. கட்டுப்பாடும் அடக்கமும் உடையவகை இரு என்று மிகமிக வற்புறுத்திக் கூற விரும்புகின்றேன். கட்டுப்பாடுள்ள ஒரு மனிதனுக்கு, கட்டுப்பாடில்லாத நூறு மனிதர்கள் ஈடாக மாட்டார்கள்' என்று நம் தல்ைவர்கள் அடிக்கடி சொல்லி வந்துள்ளார்கள். கட்டுப்ப்ாடிருந்தால் எந்தச் செயலையும் வெற்றியுடன் முடிக்கலாம். எடுத்துக்காட்டாக உன்னையே எடுத்துக்கொள். நீ கட்டுப்பாட்டுடன் இருந்தால், தேர்வு வரை திரைப்படம் முதலியவைகளுக்குச் செல்வதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் படித்து வந்தால் இறுதித் தேர்வில் முதல்வகை வெற்றி பெறுவது ஒருதலை. இப்பருவத்தி லிருந்தே கட்டுப்பாட்டுடன் இருக்கப் பழகிக் கொண்டால் பின்னர் வாழ்க்கை நெறியில் நு ைழ யு ம் .ே ப ா ேத ா அரசியல் போன்ற வேறு துறைகளில் இறங்கும்போதோ கட்டாயம் உயர்வு பெறுவாய்; வெற்றி பெறுவாய். கட்டுப் பாட்டால் அளப்பரிய நன்மைகள் உண்டாகும் என்பதற்கு எள்ளளவும் ஐயமே இல்லை. இதற்கு எடுத்துக்காட்டு காந்தியடிகள் ஒருவர் போதாதா ? அடக்கமும் மனிதனை மேம்பாடடையச் செய்யும் உயரிய ஒரு பண்பாகும். அடக்கமுள்ளவன் உயர்வான்; அடக்க மிலான் தாழ்வான் என்ற கருத்தை, "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்’ என்று வள்ளுவர் நமக்கு அறிவுறுத்துவதை என்றும் மனத்தகத்தே நிலைநிறுத்தி ஒழுகுதல் வேண்டும். ஆசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/189&oldid=881110" இலிருந்து மீள்விக்கப்பட்டது