உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 சொற்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்; அவர்கள் பால் உரையாடுங் காலத்துப் பணிந்து மொழிதல் வேண்டும். என்னை எவ்வாறு எண்ணுகின்றனயோ அவ்வாறே உன் ஆசிரியரையும் எண்ண வேண்டும். ஆசிரியரிடம் பணிந்து நடக்கப் பழகாவிடின் நீ நாளை யாருக்குப் பணிந்து நடக்கப் போகின்ருய் ? பணிவுடைமை, நமக்குத் தாழ்வு தந்து விடுமோ என எண்ணி விடாதே, என்றும் அஃது உயர்வே தரும. - எல்லாரிடமும் பணிந்து நடக்க வேண்டுமென்றெண்ணித் தாழ்வு மனப்பான்மையுடையவகை, அடிமை மனப்பான்மை யுடையவகைப் பழகி விடாதே. பணிவுடைமை வேறு: தாழ்வு மனப்பான்மை வேறு, பணிவுடைமை, அன்பையும் மதிப்பையும் அடிப்படையாகக் கொண்டது. தாழ்வு மனப் பான்மை, அச்சத்தையும் இழிவையும் அடிப்படையாகக் கொண்டது. முன்னது கொள்ளப்படுவது; பின்னது தள்ளப் படுவது. பெருமித உணர்வுடன்ருன் மனிதன் வாழ வேண்டும். பெருமிதமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் செருக்குடை யவகை மாறி விடாதே. பெருமிதம் வேறு; செருக்கு வேறு. பெருமிதம் வேண்டத் தக்கது. செருக்கு வேண்டத் தகாதது. ஒன்று நல்லது; மற்றென்று கெட்டது. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்ந்து நட. இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் உள்ள வேறுபாடுகளை உணராமல் கிரம்பப் பேர் கெட்டு விட்டார்கள். அந்தக் கேட்டுக்கு நீ இடங் கொடுத்து விடாதே. அறிவு வளம் பெற வேண்டுமேல் உடல் நலனே நன்கு பேணிக் காத்துக்கொள்ளுதல் வேண்டும். அவ்வூர்த் தட்ப வெப்ப நிலைக் கேற்ப நடந்துகொள். நீராடல், எண்ணெய் முழுக்கு இவை தவறுதல் தவறு. உடலே எப்பொழுதும் தூய்மையாக வைத்திரு. உடல் தூய்மையாக இருப்பின் உளமும் ஓரளவு தூய்மையாக இருக்கும். படிக்கின்ற பாடங்கள் நெஞ்சிற் பதிவதற்கும் பதிந்தவை மறவாமல் இருப்பதற்கும் உ ட ற் று ய் ைம உறுதுணை புரியும். நினைவாற்றலுக்கு அத்துய்மை நன்மருந்து. அங்கன்மருந்தை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/190&oldid=881114" இலிருந்து மீள்விக்கப்பட்டது