உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 A. வைகறைத் துயிலெழுகையும் இளங்காலை நீரா ட்டுழே: தரவல்லன. இன்ைேரன்ன ஒழுக்கங்களில் மிகவும் உன்னிப் பாக இருக்க வேண்டும். o ஒழுக்கமென்ருல் எளிதாகக் கடைப்பிடிக்க முடியாத ஒன்று என்று எண்ணுவர் சிலர். இன்னுஞ் சிலர், ஒழுக்கம் என்ற சொல்லுக்குப் பிறிதொரு பொருளும் கற்பிப்பர். அப் பொருள், இல்வாழ்வாளுேடு கின்றுவிடும். அவ்வரையறைக் குள் மட்டும் ஒழுக்கம் முற்றுப் பெற்று விடாது. அவ்வாறு வரையறை செய்துவிடின், ஏனையோர்க்கு எவ்வாறு ஒழுக்கம் வாய்க்கும்? துயிலெழல்முதல் துயிலச் செல்லும் வரை நிகழ்கின்ற ஒவ்வொரு செயலிலும் ஒழுக்கம் விரவி நிற்கின்றது. இன்னின்ன செயலை இன்னின்னவாறு ஆற்றுவது, இவ்வேளை யில் ஆற்றுவது என வரையறுத்துக்கொண்டு, நாடோறும் வழுவாது ஒழுகி வருவதுதான் ஒழுக்கம். அவ்வொழுக்கம் வழுக்கின் இழுக்கம் ஏற்படும். இழுக்கத்திற்கு இடங் கொடுத்து விடாதே. துயிலெழல், நீராடல், உண்ணல், உறங்கல், உடுத்தல், படித்தல், பேசல், பழகல் இவ்வனைத் திலும் ஒழுக்கமுடையவனாக இரு. இருந்தால் நல்வாழ்வு உன்னைத் தேடிவந்தடையும்; விழுப்பமும் நல்கும். ஆதலின் ஒழுக்கத்தை உயிரினும் மேம்பாடுடையதாகக் கருதிக் காத்து நட. ... " சரி, கடிதம் நீண்டு விட்டதென எண்ணுகிறேன். ஒவ்வொன்ருகச் சொன்னற்றனே நீயும் கடைப்பிடித்து ஒழுக முடியும். அதனல் கடிதத்தை இவ்வளவில் நிறுத்துகிறேன். } அன்புத் தந்தை காரைக்குடி முடியரசன் அருஞ்சொற்பொருள் : கொள்வையாயின் - கொண்டால்; திங்கள் - மாதம்; நல்லை - நன்மையுடையாய்: விழைவு - ஆசை, ஊறு - துன்பம்; பற்ரு மாக்கள் - பகைவர்; செற்றம் - சினம்; கலாம் - கலகம்; ஒருதலை - உறுதி; உய்க்கும் - செலுத்தும்; ஆரிருள்-பெருந்துயர் (நரகம்); இன்னேரன்ன - இவை போன்ற, விரவி - கலந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/191&oldid=881116" இலிருந்து மீள்விக்கப்பட்டது