பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. சிறு சேமிப்புத் திட்டம் வித்து வான் திரு. எம். சுந்தரேசன் சேமிப்பின் இன்றியமையாமை a உழைப்புக்கு உவமை காட்டுவோர் அயராது உழைக்கும் சிறு உயிரினங்களாகிய தேனிக்களையும், எறும்புகளையும் கூறுவர். இவை ஒடியாடியும், பறந்து சென்றும் உணவைத் தேடிச் சேமித்து உணவை உண்டு தம்மைக் காத்துக் கொள்கின்றன. மனித சமுதாயமும் இச்சிறு வயிற்றுக் காகவே உ ைழ க் கி ன் ற து. மனிதர்கள் வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை உழைத்துப் பெறுகின்ற ஊதியத்தைக் கொண்டு அடை கின்ருர்கள். இன்றைய ச மு. க த் தி ன் பொருளாதாரம் நாணயத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. உழவர்கள் பயிர் செய்து தானியங்களை விற்றும், தொழிலாளர்கள் தொழிற்சாலையில் உழைத்தும் பொருள் ஈட்டுகின்றனர். தமக்கும் தம் குடும்பத்திற்கும் தேவையான பொருள்களை வாங்குகின்றனர். மக்களின் வாழ்க்கை, பணமின்றி இயங்குவ தில்லை. பணம் எப்பொழுதும் கைமாறிக் கொண்டே இருக்கும் போதுதான் சமுதாயத்தில் அனைவருக்கும் பயன் படுகிறது. = அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றக் கெடும்.' இக்குறளை நோக்க, குறைந்த ஊதியம் உடைய ஒருவன் தன் வாழ்க்கையைச் சீர்பெற நடத்த இயலாது; தனக்குக் கிடைக்கும் வருவாயைக் கொண்டு சிக்கன முறையில் வாழ்க்கையை நடத்தவேண்டும்; பணம் மிகுதியாக உடைய வனும் மிகுதியாகச் செலவு செய்தால் பின்னர் கடன் வாங்க நேரிடும் என்பது புலனுகிறது. i. வாழ்வில் வெற்றி பெற குடும்ப வாழ்வில் நமக்கு ஏற்படும் தேவைகளை உடனடித் தேவை, சேய்மைத்தேவை, எதிர்பாராத தேவை என மூன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/193&oldid=881121" இலிருந்து மீள்விக்கப்பட்டது