பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 கின்றன. பொதுவசதிகளை நுகர்வதற்குப் பதிலாக மக்கள் அரசாங்கங்களுக்கு வரி என்ற .ெ ப ய ரி ல் பொருளை அளிக்கின்றனர். ஐந்தாண்டுத் திட்டங்கள் தனி மனிதனின் சிறுசேமிப்புகள் நாட்டின் பெருந்திட்டங் களுக்கு உதவுகின்றன. நமது அ ர சா ங் க த் தா ர் மேற் கொண்டுள்ள ஐந்தாண்டுத் திட்டங்கள் நாட்டு மக்களுக்கு நல்வாழ்வை கல்கும்பொருட்டுத் தீட்டப்பட்டவை. ஒவ்வொரு மனிதனும் தன் எதிர்கால முன்னேற்றத் திற்காகக் திட்டமிடுவது போல் அரசாங்கமும் நாட்டின் முன்னேற்றத்திற்காக முன் கூட்டியே திட்டமிட வேண்டி யுள்ளது. முக்கியத் தொழிலான விவசாயம், பிறதொழில்கள், கல்வி, சுகாதாரம் இவை வளர்ச்சியடைய வேண்டியவை. விவசாயத்தை முன்னேற்றமடையச் செய்ய அணைக் கட்டுகளும் பாசனக் கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. பல கிராமங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்ருல் நம் நாடு தனக்கு வேண்டிய தேவையை முழுது மடையச் செய்யப் பெரிய எஃகு ஆலைகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் உண்டாக்கப்படும் எ.கு பல தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் உண்டாக்கப் பயன்படுகிறது. இந்தியா தற்பொழுது எஞ்சின்கள், இரயில் வண்டிகள் முதலியன ஆக்கும் தொழில்களுக்கான இயந்திர பாகங்களைத் தானே உற்பத்தி செய்கிறது. அறியாமையையும் பிணியையும் நீக்கப் பள்ளிகளும், மருத்துவச்சாலைகளும் ஏற்பட்டுள்ளன. இவைகளெல்லாம் ஐ ங் த ா ண் டு த் திட்டங்களாலேயே ஏற்படுத்தப்பட்டன. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ. 3,360 கோடியும், இரண்டாவதில் ரூ. 6,750 கோடியும்; மூன்ருவதில் ரூ. 1 1,600 கோடியும் செலவிடப்பட்டன. இத்தொகைகள் யாவும் வரி மூலமாகவும், அயல் நாட்டுக் கடன் மூலமாகவும், மக்களின் சிறுசேமிப்பு மூலமாகவுமே கிடைத்துள்ளன. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் முத லீட்டுத் தொகையில் 11% சிறு சேமிப்பு நிதிகள் வழியாக நாட்டின் ஆக்கப் பணிக்கு உதவிய தொகை ஏறத்தாழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/196&oldid=881127" இலிருந்து மீள்விக்கப்பட்டது