உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1Տ6 ரூ. 370 கோடியாகும். நமது சிறுசேமிப்பு நமது குடும்பத் தினரின் வாழ்வை வளப்படுத்துவது மட்டுமின்றி, மறைமுக மாக காட்டின் வளத்தைப்பெருக்கி காட்டு மக்களையும் வாழ் விக்கின்றது. ஆக்க வேலைத் திட்டங்கள் நிறைவேறி நவபார தத்தின் வருங்காலம் செழிக்க சிறுசேமிப்பு இயக்கம் எத்துணை உதவியளிக்கிறது என்பதை மீண்டும் கூறல் வேண்டுமோ ? சிறு சேமிப்பு -- சிறு சேமிப்பு இயக்கம் சிக்கன வாழ்வை வளர்க்கவும், சேமிப்பை நல்வழியில் ஈடுபடுத்தவும் உதவுகிறது. நாம் சேமித்த தொகையை நம்மிடமே வைத்துக் கொண்டிருந்தால் அது வளர வழியில்லை. அதனை நாம் செலவழிக்க இடமுண்டு. எனவே சேமிப்பை நமது நலனுக்கும், குடும்பப் பாது காப்புக்கும் நாட்டின் ஆக்கத்திற்கும் உதவும் பொருட்டு அதைச் சேமிப்பு பாங்கிகளிலோ, சிறுசேமிப்புப் பத்திரங் களிலோ முதலீடு செய்வதால் அவை பாதுகாப்புடன் இருப்பதோடு வளரவும் செய்கின்றன. நன்முறையில் முதலீடு செய்யப்பட்ட முதலீடு உற்பத்தியைப் பெருக்கி, மக்களுக்கு வேலை வாய்ப்பளித்து நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உதவி, நம் நாட்டிற்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் ஒரு சீரிய பணியைச் செய்கிறது. தற்பொழுது நடைமுறையில் பலவகை சேமிப்பு முதலீடு வழிகள் உள்ளன. 12 ஆண்டு தேசீயப் பாதுகாப்புப் பத்திரங்கள் சேமிப்பு நிதி உள்ள தபால் அலுவலகங்கள் யாவற்றிலும் இப்பத்திரங்களைப் பெறலாம். ரூ. 5இல் இருந்து பல்வேறு மதிப்புகளில் இப்பத்திரங்கள் விற்கப்படுகின்றன. இதில் முதலீடு செய்த தொகைக்கு 6 25% தனி வட்டியோ, 4.75% கூட்டு வட்டியோ அளிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தன்பெயரில் அ ல் ல து குடும்பத்தினர்களின் கூட்டுப் பெயரில் ரூ. 35,000 வரை இதில் முதலீடு செய்யலாம். இத்தொகைக்கு வழங்கப்படும் வட்டிக்கு வருமான வரிச் சலுகை உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/197&oldid=881129" இலிருந்து மீள்விக்கப்பட்டது