உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 10 ஆண்டுப் பாதுகாப்பு நிதிப் பத்திரங்கள் 10 ஆண்டுப் பாதுகாப்பு நிதிப் பத்திரங்கள் ரூ. 50. அதன் மடங்குகள் ஆகிய மதிப்பில் விற்கப்படுகின்றன. ஒருவருடம் கழிந்த பின்னர், என்று வேண்டுமானலும் அவற்றை மாற்றிக்கொள்ளலாம். பத்திரத் தொகைக்கு வழங்கப்படும் 4.5% வட்டிக்கு வருமான வரி இல்லை. அஞ்சல் நிலையச் சேமிப்புப் பாங்கு அஞ்சல் நிலையமானது நாட்டின் அன்ருட வாழ்வில் நெருங்கிய தொடர்புகொண்டு நாட்டு வாழ்வின் ஒரு பகுதியாகவே விளங்குகிறது. இ.து ஏழைகளின் நம்பிக்கை யையும், நல்லெண்ணத்தையும் பெருவாரியாகப் பெற்றுள்ளது. ஒரு கோடி மக்களின் பாங்காக, ரூ. 500 கோடி சேமிப்பைப் பெற்றுள்ளது. ரூ. 5 இருந்தாலே இதில் கணக்கு வைத்துக் கொள்ளலாம். சிறுவர் சிறுமியரும் இதில் கணக்கு வைத்துக் கொள்ளலாம். தனி ஒருவர் ரூ. 15,000 வரையிலும், கூட்டுக் கணக்காயிருந்தால் ரூ. 30,000 வரையிலும் சேர்த்து 6D6)J 55556l)TTLD. வளர்ந்து வரும் சேமிப்புத் திட்டம் மாத வருவாய் பெறுபவர்களுக்கு இ த் தி ட் ட ம் பயனளிக்கும். இது 5, 10 அல்லது 15 ஆண்டுகளில் எதிர் நோக்கும் செலவுகளைச் சமாளிக்க உதவும் திட்டமாகும். மாதா மாதம் ரூ. 5, 10, 20, 50, 100, 200 ஆகிய தொகை களைச் செலுத்தலாம் 15 வருடச் சேமிப்பாளுல் மாதம் ரூ. 300 கூடச் செலுத்தலாம். 5, 10, 15 வருடக் கணக்கு களுக்கு முறையே 3.3%, 3.8%, 4.3% வட்டியளிக்கப் படுகிறது. தவணை தவறிவிட்டால் அவற்றை வட்டியுடன் அடுத்துச் செலுத்திவிடலாம். குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே தேவை ஏற்பட்டால் கணக்கில் உள்ள தொகையில் பாதியைக் கடனுகப் பெறலாம். கடனைத் தவணைகளில் திருப்பிக் கட்டிவிடலாம். இந்த முறையில் 10 ஆண்டுக் காலத் திற்குப் போடும் சேமிப்புக்கும் வருமானவரிச் சலுகை உண்டு. சேமிப்புத் தலைகள் சேமிப்புத் தலைகள் 25 பை. 50 பை. ரூ. 1 மதிப்புக் களில் தபால் நிலையங்களில் விற்கப்படுகின்றன. சிறுவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/198&oldid=881131" இலிருந்து மீள்விக்கப்பட்டது