பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. கிராம முன்னேற்றம் | வித்துவான் திரு. ஆ. பழனி கிராமமும் நாகரிகமும் கிராமம் என்றவுடன் சலசலவென ஓடி வரும் புனல் ைெறாத வாய்க்கால்களும், அவற்றின் இருமருங்கும் செழித்து வள மது பசுமை உமிழும் வயல்வெளிகளும், அடர்ந்து வளர் த சோலைகளும், தோப்புக்களும், கொடி படர்ந்த கூரைகளேயுடைய சிறுசிறு குடில்களும் குறுகிய வீதிகளும் பெருகிய வேலிகளும் நம் கண் முன்னே காட்சியளிக்கும். பெரும் பெரும் மாளிகைகள், திரைப்பட அரங்குகள், வியத்தகு மருத்துவ மனைகள், விரைந்தோடும் ஊர்திகள் முதலியன வற்றை ஆண்டுக் காண்டல் அரிது. நகரங்களிலேதான் அவற்றைக் காணலாம். இவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நகரமே நாகரிக வாழ்க்கைக்கு ஏற்ற இடம் எனப் பலர் கருதுகின்றனர். உண்மை நாகரிகம் உணராதவரின் உள்ளக் கிடக்கைதான் அது. போலி நாகரிகத்தில் மூழ்கிப் புரளும் நெஞ்சங்களுக்கு உண்மை புலனுவதில்லை. நாட்டுக் குரிய நலமிக்க நாகரிகத்தின் அடிப்படை, கிராமங் களிலேதான் பரவிக் கிடக்கின்றது என்பதை மறந்து, மயங்கிக் கலங்குகின்றனர். கிராமத்தின் பெருமைகள் கிராமங்கள்தாம் நாட்டின் உயிர்காடி. நகர மாந்தரின் உயிர் வாழ்வுக்கே கிராமங்கள் காரணமெனின் ஏனைச் செயல்களுக்கு அவற்றின் இன்றியமையாமையைக் கூறவும் வேண்டுமோ? உழவினர் கைம்மடங்கின் உலகில் யாது கிகழும்? ஒன்றுமே நிகழாது. அம்மட்டோ? மனவமைதிக் கேற்ற சூழ்நிலைகளையுடையதும் கிராமமே. நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாகக் கருதிக்கொண்டிருக்கும் பெரு நகரங் களில் பெறமுடியாத காணமுடியாத அமைதியைக் கிராமத் திலேதான் பெறமுடியும், க | ண மு. டி. யு ம். கவிஞர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் முதலியவர்கள் விரும்பிப் போற்றுவது கிராமமே. தூய்மையான, குளிர்ந்த, உடல்நலத் திற்கேற்ற காற்ருேட்டமும், கண்ணுக்கினிய காட்சிகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/200&oldid=881138" இலிருந்து மீள்விக்கப்பட்டது