பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 செவிக்கினிய ஓசைகளும் கிறைந்து, செறிந்து, மிடைந்து விளங்குவது கிராமமே. சுருங்கக் கூறின் உயிர்நிலைபெற, உடல்நலம்பெற, உள்ளத்தே அமைதி நிலைபெற்ருேங்கப் பெருந்துணை புரிவது கிராமம் என்பதில் ஐயமேயில்லை. முன்னேற்றப் பணிகள் இத்தகு மேன்மை வாய்ந்த கிராமங்களை நன்கு பேணிக் காப்பதும் அவற்றின் முன்னேற்றத்திற் கண்ணுங்கருத்துமாக இருந்துவருவதும் நம் கடமையாகும். கி ர | ம ங் க ளே த் துப்புரவாக வைத்துக்கொள்ளுதல், கல்வி வளரச் செய்தல், தொழில் வளர்ச்சியில் நாட்டங்கொள்ளுதல், தீண்டாமை ஒழித்தல், மருத்துவ மனைகள் நிறுவுதல் முதலிய இன்றி யமையாத் தேவைகளை நிறைவு செய்தலே கிராம முன்னேற் றத்திற்குரிய பணிகளாகும். வாழ்க்கைக்கு வேண்டிய வசதி வாய்ப்புக்களை உண்டாக்கிக் கொடுத்தாற்ருன் கிராமத்தில் உள்ளவர்கள் நகரங்களுக்குச் சென்று தங்கவேண்டும் என்ற மோகங் குறைந்து, தங்கள் கிராமங்களிலேயே உறைவார்கள். நகரத்தவர்களும் கிராமங்களை இகழாதிருப்பர். நகரம் பரப்பிற் பெரியது; கிராமம் பரப்பிற் சிறியது என்ற வேறு பாட்டைத் தவிரப் பிற வேறுபாடு இருத்தல் கூடாது. துப்புரவு உடல் நலத்துக்கேற்ற உயரிய கிராமங்களைத் துய்மை யாக வைத்துக்கொண்டுள்ளோமா? அ த் து ைற யி ல் சிறிதேனும் நாட்டம் செலுத்தினேம் அல்லோம். கழிவுப் பொருள்களையும் குப்பை கூளங்களையும் கண்ட கண்ட இடங் களில் எறிந்து விடுகின்ருேம்; குடிநீர் கிலைகளாகிய கிணறு, குளம் முதலியவற்றில் துய்மைக் குறைவை உண்டு பண்ணுகின்ருேம். மக்கள் குளிக்கும் இடங்கள், மாடுகள் குளிக்கும் இடங்கள் என்ற வேறுபாட்டை மறந்துவிட்டோம். அதல்ை பல்வேறு பிணிகட்கும் ஆளாகின்ருேம். விதிகள், நீர்நிலைகள் முதலியனவற்றைத் துப்புரவாக வைத்துக் கொள்ளுதல், கழிவுநீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள் ளுதல், குப்பைகளைத் தனியே ஓரிடத்திற் கொட்டுதல் போன்ற துறைகளைக் கண்காணித்து ஆவன செய்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/201&oldid=881140" இலிருந்து மீள்விக்கப்பட்டது