உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 கல்வி வளர்ச்சி பள்ளியில்லா ஊரைக் காணின் தீயிட்டுக் கொளுத்துக என்று சீறிச் சினந்துரைக்கின்றர் பாரதியார். கல்வியின் இன்றியமையாச் சி ற ப் பி னே யுணர்ந்தமையால் கவிஞர் அவ்வாறு கனன்றுரைப்பாராயினர். கல்வியின் பொருட்டு நகரங்களுக்கு அவர்கள் செல்லாமல், தங்கள் ஊர்களிலேயே அதனைப் பெறுமாறு செய்தல் வேண்டும். பிள்ளைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்புவதில் பெற்ருேர் அக்கறை காட்ட வேண்டும். முதியோர் கல்வியறிவு பெறுமாறு செய்ய இரவுப் பள்ளிகளை யமைத்து, அவர்கட்குக் கல்வியின் சிறப்பை விளக்கி, அறிவு புகட்ட வேண்டும். செய்தி இதழ்களைப் படித்துச் சுருக்கமாக அவர்களுக்கு விளக்க வேண்டும். படிப்பகம், நூலகம் அமைத்து, அவ்வூரினர் பயனடையுமாறு செய்ய வேண்டும். வானெலி, படக்காட்சி இவற்றின் வாயி லாக உலகச் செய்திகளை விளக்க வேண்டும். இவ்வாறு கிராம மக்களுக்கு அறிவு வளர்ச்சியை உண்டாக்கினல் கிராமம் முன்னேற்றம் அடையும்; அம்மக்களும் சுதந்தர நாட்டில் வாழத் தகுதி பெற்றவராவார். தொழில் வளர்ச்சி கல்வியறிவு வளர்வதோடு கிராமச் சூழ்நிலைகளும் வளரச் செய்ய வேண்டும். புதிய முறைகளில் உழவுத் தொழிலை வளமுறச் செய்யும் வழிகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆடு மாடுகளைப் பேணி வளர்க்கும் முறைகளையும் கோழிப் பண்ணைகள் அமைத்து விரிவுபடுத்தும் வகைகளையும் அவர் களுக்குச் சொல்லித்தர வேண்டும். வேளாண் மைக் காலம் போக எஞ்சிய காலத்தில் வீண்வம்பு, வெட்டிப் பேச்சு, சோம்பிக் கிடத்தல் இவற்றைக் களைந்து பயனுள்ள சிறு சிறு தொழில்களைச் செய்ய முனைதல் வேண்டும். வெல்லம் காய்ச் சுதல், பாய் கூடை பின்னுதல், தீப்பெட்டி செய்தல், கயிறு திரித்தல், மூங்கில் தட்டி செய்தல் முதலிய சிறு தொழில்களை மேற்கொள்ளுமாறு பயிற்றுதல் வேண்டும். இத்தொழில் களுக்கு அரசு கன்முறையில் உதவவேண்டும். விற்பனைச் சந்தைகளை உண்டாக்கிக் கொடுத்தும், பொருட்காட்சி நடத்தி த-சோ-26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/202&oldid=881142" இலிருந்து மீள்விக்கப்பட்டது