உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை • செய்யுட் பகுதி 1. வாழ்த்து (அ) கடவுள் வாழ்த்து குறிப்பு : கடவுள் வாழ்த்துப் பாடல் தாயுமான சுவாமி பாடல் என்னும் நூலில், 'பொன்னை மாதரை என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. தாய்மானவர் சோழநாட்டுத் திருமறைக்காடு என்னும் ஊரில், கேடிலியப்பப் பிள்ளைக்கும் கஜவல்லியம்மையாருக்கும். பிறந்தவர். இவர் காலம் கி. பி. 17ஆம் நூற்ருண்டின் இடைப் பகுதியாகும். 18 ஆம் நூற்ருண்டென்றும் சிலர் கருதுகின்றனர். மெளன குருவிடம் உபதேசம் பெற்றவர். திருச் சிராப்பள்ளியில் ஆண்டுவந்த விசயரங்க சொக்கநாத நாயக்கரிடம் பணி புரிந்தவர். மனைவியின் பெயர் மட்டுவார்குழலி. இராமநாதபுரத்திலுள்ள இலட்சுமிபுரமெனப்படும் காட்டுருனியில் இறைவனடி எய்தினர். இவர் தம் பாடல்கள் படிப்பதற்கு எளியன; பத்திச் சுவையூட்டுவன; இறைத் தன்மையை நன்கு விளக்குவன. சமரச நிலையை யுணர்த்துவன. அருஞ்சொற்பொருள் : ஒளியை-ஒளிவடிவாகிய இறைவனை, மெய்யினை-உண்மை வடிவான வன: கண்ணுகின்றவர்-அணுகும் அடியார் எண்ணியெண்ணி-அடுக்குத் தொடர்; இரவும் பகலும்-உம்மை எண்ணும்மை. (ஆ) மொழி வாழ்த்து குறிப்பு : Hir மொழி வாழ்த்துப் பாட்டு மாரிவாயில் என்னும் நூலிலிருந்து எடுக்கப் பட்டது. ஆசிரியர்: நாவலர் ச. சோமசுந்தர பாரதியார். இவர் சட்டக் கல்வி பயின்றவர் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரிய ராகப் பணிபுரிந்தவர்; சிறந்த சொல்லாற்றலும் அஞ்சா நெஞ்சமும் விரப் பொலிவும் கொண்டு விளங்கினவர்; ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் எழுதியவர். பசுமலையில் வாழ்ந்து வந்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/46&oldid=881205" இலிருந்து மீள்விக்கப்பட்டது