உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 2. வனப்பு - அழகு. உகிர் - நகம். செயிர் - குற்றம். சொல்லின் வனப்பு - சொல்வன்மையான் வரும் அ ழ கு. புறத்துறுப்புக்களால் உண்டாகும் அழகு அழகன்று;-நூலொடு பொருந்திய சொல்வன்மையால் வரும் அழகே அழகு என்றவாறு. வினுக்கள் :

  • 1. தேவர், பூதர் ஆதர், எருது எனப்படுவார் யார் யார் ?

2. எவை வனப்பல்ல ? எது வனப்பாகும்? 11. தொடர் நிலைச் செய்யுள் 1. சிலப்பதிகாரம் - சிலம்பால் விளைந்த வரலாற்றைக் கூறும் நூலாதலின் இது'சிலப்பதி காரம் என்னும் பெயர் பெற்றது. சிலம்பு- அதிகாரம். சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம் பெருங் காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது முத்தமிழ்க் காப்பிய மெனவும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும் கூறப்படும்; புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று பிரிவுகளைக் கொண்டது; நம் பாடப் பகுதி புகார்க் காண்டத்தில் உள்ளது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்ருகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்துவந்துாட்டும் என்னும் மூன்று உண்மைகளை விளக்குவதே சிலம்பின் நோக்கம். ஆசிரியர்: இளங்கோ வடிகள், இவர் செங்குட்டுவன் தம்பி. இமயவரம்பன் நெடுஞ்சேரலாத னுக்கும் நற்சோணைக்கும் மகளுகத் தோன்றியவர். சைன சமயத்தவர். காலம்: கி. பி. இரண்டாம் நூற்ருண்டு. அருஞ்சொற்பொருள் : 1. இலவந்திகை-அரசர்க்குரிய சோலை. எயில்-மதில். 2 தாழ்' பொழில் - மரங்கள் தாழ்ந்த சோலை. தண்பதப் பெருவழி - புனலாடச் செல்லும் பெருவழி. 3. வாயில்-கரை. கடைமுகம்-சங்க முகத்துறை. 4. குடதிசைக் கொண்டு - மேற்கு நோக்கி. 5 கோடு - கரை. 6. காவதம் - காத தூரம். கவுந்திப் பள்ளி - கவுந்தியடிகள் எழுந்தருளி புள்ள பள்ளி. 7. பொதும்பர்-சோலையில். ஆங்கண்-அப்பொழுது. 8. இறும்-இற்றுவிடும் எனத் தக்க. நுசுப்பு-இடை, இனைந்து-வருந்தி. 9. நறும் பல் கூந்தல் - நறிய பலவாகிய கூந்தலையுடைய கண்ணகி. உயிர்த்து-முச்செறிந்து. 10. முதிராக் கிளவியின்-மழலைச் சொற்களால், எயிறு-பற்கள். 12 மதுரை அணிமையிலுள்ளது என்பான் முப்பது என் துை ஆறைந்து எனக்கூறினன். உம்பர்-அப்பால். 13. ஐங்கூந்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/57&oldid=881229" இலிருந்து மீள்விக்கப்பட்டது