பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 3. கலிப்பகையார் உயிர்நீத்த செய்தி கேட்ட திலகவதியார் நிலைமையினை எழுதுக. 4. திலகவதியாரிடம் மருணிக்கியார் வேண்டிக்கொண்டதென்ன? 5. மருணிக்கியார் மனத்துயரை மாற்ற யாது செய்தனர் ? 6. யானும் முன்னம் உயிர்நீப்பன்-இடஞ்சுட்டி விளக்குக. 4. கம்பராமாயணம் கம்பரால் இயற்றப்பட்ட இராமாயணம் ஆதலால் கம்பராமாயணம் எனப்பட்டது. இராமன் வரலாற்றை அறிவதற்கு இடமாக இருப்பதால் இராமாயணம் எனப்பட்டது. இராமாவதாரம் எனக் கம்பர் வழங்குவர். வான்மீக ராமாயணம் இதற்கு முதனூல் என்பர். பாலகாண்டம், அயோத் தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தைக் காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறுபிரிவுகளையுடையது. ஒட்டக் கூத்தரி யற்றிய உத்தரகாண்டத்தையும் சேர்த்து ஏழெனவுங் கூறுவர். கம்பர், சோழநாட்டுத் திருவழுந்துாரில் பிறந்தவர். சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர். கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதி எனவும் பன்னிரண்டாம் நூற்ருண்டின் பிற்பகுதி எனவுங் கூறுவர். அருஞ்சொற்பொருள் : 1. நிற்றி-நிற்பாயாக. நெடியவன்-இராமனை. குறுகினன்-வந்துள் ளான். தாயின்-தாயைப்போல. எற்று-மோதுகின்ற. நாவாய்-படகு. 2. அழைத்தி-அழைத்து வருக. பரிவினன்-விருப்பத்தையுடை யவன். குஞ்சி-தலைமுடி. 3. இருத்தி-இரு. நீத்த-கடந்த அருத்தியன்-அன்பன். திருத் தினன்-செவ்விதின் ஆக்கி; முற்றெச்சம். விருத்தம்-முதுமை. முறுவல்புன்னகை. 4. சீர்த்த-சிறந்தன. பரிவு-அன்பு, பவித்திரம்-துயது. 5. ஏறுதும். கடப்போம். யாணர்-புதுமை. சாருதி-வருவாய். 6. காதலன்-அன்பகிைய கு க ன். ஈர்கிலா-பறித்தெறியாத, திர்கிலேன்-இறந்தேனல்லேன். mo 7. கோதை-மாலை. குரிசில்-சிறந்த ஆண்மகன். 8. அழைத்தனன்-அழைத்து; முற்றெச்சம். ஆழி-கடல். துடிஒருவகைப் பறை. சிலை-வில். விக்கி-இறுகக்கட்டி. 9. நியமம்-கடன், மரபுளி-முறைப்படி. வைகல்-கழிவு நாள். வேலை- கடல். அமுது அனுள்-சீதை. பாயல்-படுக்கை வரி-வரிந்து கட்டிய இமைப்பிலன்-இமையாது; முற்றெச்சம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/63&oldid=881244" இலிருந்து மீள்விக்கப்பட்டது