உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 6 வழிபாட்டுப் பாடல்கள் திருவருட்ப திரு+ அருள் + பா. இறைவன் திருவருளைப் பாடுகின்ற பாட்டு; இறைவன் திருவருளால் பாடப்பட்ட பாட்டு. ஆசிரியர்: இராமலிங்க அடிகள். இவர்தம் பெற்ருேர்: இராமையா பிள்ளே, சின்னம்மாள். ஊர்: விதம்பரத்துக்கு அருகிலுள்ள மருதூர். காலம் 1823-1878 இவர்தம் பாடல்கள் உள்ளத்தை உருக்குவன; இனிமையும் எளிமையும் உடையன; ர்திருத்தக் கருத்துக்களும் சமரச சன்மார்க்க நெறியும் நிறைந்தன. அருஞ்சொற்பொருள் : தரு-மரம். தடம்-பொய்கை புனல் நீர் திருமால் அருள் வேட்டல் திருமாலுடைய அருளை வேண்டுதல் ஆசிரியர்: திரு வி கலியாண சந்தரஞர். இவர், அரசியல், மொழி, தொழிலாளர் இயக்கம், சமயம் முதலிய எல்லாத் துறைகளிலும் உண்மைப் பணிபுரிந்தவர். காவன்மை, பாவன்மை, எழுத்தாற்றல் மிக்கவர். எளிய வாழ்வினர் தூய உள்ளத் தினர். சமரச நோக்குடையவர் பழமைக் கருத்துக்களுள் தள்ளுவன தள்ளிப் புதுமைக் கருத்துக்களுள் கொள்ளுவன கொள்ளும் கோட் பாடுடையர். திருமால் அருள் வேட்டல் என்னும் நூ லிலிருந்து எடுக்கப் பட்டது இப்பாடல். காலம்: 1883–1954. அருஞ்சொற்பொருள் : தரணி-உலகம் குன்றிவரல்-குறைந்து வருதல். நிமலா.குற்றமற்ற இறைவனே இடர்-துன்பம் ஆண்தகையே,ஆண்களிற் சிறந்தவனே (புருடோத்தமனே). அல்லிக்கேணி-சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி. பார்த்தசாரதி-அங்கே கோவில்கொள்ளும் இறைவன் பெயர். வேதநாயகர் பாடல் வேதநாயகர் திருச்சிராப்பள்ளிக்கு அணிமையிலுள்ள குளத்துாரில் பிறந்தார். இசைத்தமிழ்ப் பாடல்கள் பல பாடியுள்ளார். தமிழில் நாவல்' முதன் முதலில் எழுதியவர் இவரே. நீதிபதியாகப் பணியாற்றியவர். கிறித்துவ சமயத்தவராயினும் சமரச நோக்குடையவர். மகாவித்துவான் tட்ைசிசுந்தரம் பிள்ளையுடன் தொடர்பு கொண்டவர். நீதிநூல் முதலிய நூல்களை இயற்றியவர். - - அருஞ்சொற்பொருள் : புட்கள்-பறவைகள். சுதி-இசை. தரு மரம். அலர் மலர். பூதம்:ம்பூதங்கள்; நிலம், நீர், தீ, காற்று, வான். வாழ்த்தா(த)து என்னே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/72&oldid=881264" இலிருந்து மீள்விக்கப்பட்டது