உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- == G2 தபிநாயக மான் மிய மஞ்சரி நபி நாயகத்தின் பெருமைகளைக் கூறும் நூல். இதனை இயற்றியவர் சதாவதானி செய்குதம்பிப் பாவலர். இவர் நாஞ்சில் நாட்டு நாகர் கோவிலைச் சார்ந்த கோட்டாறு என்னும் பகுதியில் பிறந்தவர், தந்தையார் பெயர் பக்கீர் மீரான் நினைவாற்றல் திறங்காட்டிச் சதாவதானி என்னும் சிறப்புப் பெற்ருர். இவர் உரையாசிரியராகவும் நூலாசிரியராகவும் சொல்வன்மையுடையராகவும் விளங்கினர். இலக்கண இலக்கியப் பயிற்சி மிக்காராய்ப் பல பொருளமையப் பாடும் ஆற்றலுடன் விளங்கினர். சமயப் பொது நோக்கினராகவும் விளங்கினர். காலம்: 1874-1950. அருஞ்சொற்பொருள் : குன்றுபெறு தீபம்-மலையிலிட்ட விளக்கு. கோத்து-கோவை செய்து. துன்றும்-நிறைந்த எளிதேயோ-எளிதே. வினுக்கள் : 1. எத்தகைய நிலம் நல்ல நிலம் என்று கூறப்பெறும்? 2. செல்வத்துப் பயன் யாது? ஏன்? - 3. மழை பெய்யுங் காட்சி பாரதியாரால் எவ்வாறு கூறப்பட்டுள்ளது? 4. இரவின் வருகையும் பகலவன் தோற்றமும் ஆசிரியரால் எவ்வாறு புனைந்துரைக்கப்பட்டுள்ளன? - 3. சிட்டுக்கவி, இரட்டுற மொழிதல்-இவற்றை விளக்குக. இ. மதுரைச் சொக்கநாதர் சீட்டுக் கவியிற் குறிக்கப்பெற்ற பொருள் யாது? - 7. சிலேடையை விளக்குக:- இக்கட்டுத் தீர்க்கும், ஈடேற்றங் கொள்ளும். 8. குறவஞ்சி கூறும் நாட்டு வளத்தை எழுதுக. 9. தமிழ்விடு தூது, தமிழின் பெருமைகளாகக் கூறுவன யாவை ? 10. இராமலிங்கர் இறைவனை எவ்வெவ்வாறு குறிக்கின் ருர்? 11 திரு. வி. க. பார்த்தசாரதியிடம் வேண்டுவது யாது? 12. உலகத்துப் பொருள்கள் கடவுளைப் ேப ா ற் று வ ன வ க வேதநாயகர் எவ்வாறு கூறுகின்ருர்? 18. கபி நாயகத்தின் மாபெருமை எத்தகையது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/73&oldid=881266" இலிருந்து மீள்விக்கப்பட்டது