பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 திருந்தது. பூங்கொடி படர்வதற்கு ஏற்ற கொழு கொம்பாய் அமைந்த பெருமை சான்ற வேங்கையின் தோற்றம், ஆண்மை யும் பெருமையும் பொருந்தித் திகழும் தலைமகனது விழுமிய கோலம்போல் விளங்கிற்று. அவ் வேங்கையில் நன்ருகப் படர்ந்து அதன் கிளைகளுக்குப் புதியதோர் அழகு அளித்த கொடியின் கோலம், தலைமகனுடன் ஒன்றி வாழ்ந்து இல் வாழ்க்கைக்கு அழகளிக்கும் குலமங்கையின் குணத்தை விளக்கி கின்றது. இன்னும் வேங்கை துயருற்று ஆற்றில் விழும் கிலையில் அதனேடு தானும் வீழ்ந்து துயருற்ற கொடி யின் தன்மை, தலைவன் துயருறும்போது தானும் துயருறும் நிறை அமைந்த மங்கையின் மனப்பான்மையை விளக்கி கின்றது. இத்தகைய பெருமை, கற்பமைந்த மாதர் வாழ்க்கை யில் கவின் பெற விளங்கக் காணலாம். இராமனும் சிதையும் தேனடைந்த சோலைத் திருநாடு துறந்து கானகம் செல்ல இசைந்த கமலக் கண்ணன், தலைமகளாகிய சீதையினிடம் விடைபெறுமாறு அவள் மாளிகைக்குச் சென்ருன். அங்கு அறமே உருவாயமைந்த திருமகளைக் கண்டு மாதே இணை யற்ற என் தம்பி இந்நாட்டை அரசாள்வான். நான் தாய் தந்தையரது ஆணையைத் தலைமேற் கொண்டு வெளியே போந்து மலைவளங்கண்டு வருவேன். கரன் வரும் அளவும் நீ வருந்தாதிரு' என்று மொழிந்தான். அம்மாற்றம் கேட்ட மங்கை, நாயகன் வனம் நண்ணலுற்ருன் என்றேனும், நாடாளும் கற்பதத்தை இழந்தான் என்றேனும் வருந்தினுள் அல்லள். ஆயினும் நீ வருந்தாதே! நான் உன்னை விட்டுப் பிரிவேன்' என்று நாயகன் உரைத்த சொல் நஞ்சுபோல் மங்கையின் நெஞ்சை நலிவுறச் செய்தது. நாய கன் வனம் கண்னலுற் ருன் என்றும் மேய மண் இழந் தான் என்றும் விம்ம ல ள் நீ வருங் தலைநீங்கு வன்யான் என்ற -- தீய வெஞ்சொல் செவிசுடத் தேம்புவாள்' என்று கவியரசராகிய கம்பர் மங்கையின் மனப்பான்ழையை மாண்புற விளக்கிப் போந்தார். இவ்வாறு மயங்கித் தளிர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/76&oldid=881275" இலிருந்து மீள்விக்கப்பட்டது