உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மங்கையை நோக்கி மன்னவன், மாதே! பஞ்சினும் மெல்லிய உன் கமலபாதம் வெம்மை நிறைந்த கானகத்தில் தோய்ந்து வருந்தும்; கதிரவன் கொடுமையால் கானகக் கற்களெல்லாம் கனல் உமிழும்; அக்கொடிய சூடு உன்னுல் தாங்குதற்கு அரிதாகும்' என்று வனத்தின் வெம்மையை மங்கை அறியு மாறு எடுத்துரைத்தான். அப்போது மையறு மனத்தளாய மங்கை'ஐய,கின் பிரிவினும் சுடுமோ அப்பெருங்காடு' என்று, "அத்துன்பத்திற்கு இணையாய துன்பம் வேறில்லை யென்றும்’ வினவிள்ை. தலைவனப் பிரிவதே பெருந்துன்பம் என்று நிறையமைந்த மாதர் கருதுவர் என்பதற்குச் சீதை ஒரு சிறந்த சான்ருய் அமைகின்ருள். நளனும் தமயந்தியும் இவ்வாறே கலியின் கொடுமையால் நாடும் பீடும் இழந்து கல்லும் முள்ளும் நிறைந்த கானகம் நோக்கிச் சென்ற நளன் தன்னேடு போந்த தமயந்தியின் மென்மை நோக்கி மனம் நொந்து விதர்ப்ப நாட்டிற்குச் செல்லும் வழியைக் கண்ட போது, 'மாதே! உன் தந்தையின் ஊருக்குச் செல்லும் வழி இதுவே" என்று எடுத்துரைத்தான். அதுகேட்ட மங்கை மனம் பொருது அழுது, "ஆங்கது கேட்டலும் அழுது மாழ்கிநொந்து ஈங்குகின் அடியனேன் பிழைத்தது யாதுகொல் பூங்கழற் குரிசிலோய் பொறியி லேன்தனை நீங்கவோ இவ்வுரை கிகழ்த்தினுய் என்ருள்” என்று கவி கூறுமாறு தயங்கித் தலைவனைப் பிரியாது பின் தொடர்ந்து சென்ருள் என்று இனிது அறியப்படுகின்றது. கோவலனும் கண்ணகியும் இன்னும் பெற்ருேர் சேர்த்து வைத்த பெருஞ்செல்வம் எல்லாம் பொதுமாதிடம் இழந்து வறியனுய், மாடமதுரையில் மனையாளது மணிச்சிலம்பை விற்று வாணிகம் செய்யுமாறு புகார் நகரின்றும் போந்த கோவலனைப் பிரியாது பின்னே சென்று, கடுமையார் கானகத்தில் கமல பாதமுழ் மெல்லிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/77&oldid=881277" இலிருந்து மீள்விக்கப்பட்டது