பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அவளுக்குத் துணையாக வேலைக்காரர் சிலரையும் வைத்து விட்டுச் சில நாள்களில் திரும்பி வருவதாகச் சொல்லி அவர்கள் போளுர்கள். திருமணத்தின் நான்காவது நாள் இரவு மிகவும் சிறப்பாக ஊர்வலத்துக்கு வேண்டிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் காட்சியைக் கண்டுகளிக்க வேண்டுமென்றே சுற்றுப் புறத்திலுள்ள சிற்றுார்கள் பலவற்றிலிருந்தும் மக்கள் வந்து கூடினர்கள். உள்ளிக்கடையில் கிழவியுடனிருந்தவர்கள் அன்றிரவு மட்டும் போய் ஊர்வலத்தைப் பார்த்துவிட்டு வருவதாக அவளிடம் உத்தரவு பெற்றுப் போய்விட்டார்கள். அதனால் வீட்டில் கிழவி மட்டும் அன்றிரவு தனியே இருக்க நேர்ந்தது. அக்குடும்பத்தில் அளவற்ற பணம் உண்டென்பதை அறிந்த திருடர்கள் சிலர் எப்படியேனும் அவ்வீட்டிற் புகுந்து கொள்ளையடிக்க வேண்டுமென்று பல நாளாக எண்ணி இருந் தார்கள்; எப்பொழுதும் பலர் கூடியிருக்கும் அவ்வீட்டிற் புகுவது இடர்ப்பாட்டிற்கு ஏதுவாகும் என்பதை அறிந்தவர்க ளாதலின் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அயலூரில் நடைபெறும் திருமணத்தின் பொருட்டு எல்லாரும் வீட்டை விட்டு வெளியூருக்குச் சென்றிருப்பது அத்திருடர்களுக்கும் எவ்வகையாலோ தெரிந்துவிட்டது. ஆதலின், இதுவே நம் எண்ணம் கை கூடுவதற்கு நல்ல சமயம் என்றெண்ணி அன்றிரவு அவ்வீட்டிற்குச் சென்று கொள்ளையடிக்க ஏற்பாடு செய்தார்கள். பத்துத் திருடர்கள் ஒன்று சேர்ந்து அன்றிரவு நடு யாமத்தில் உள்ளிக்கடைக்கு வந்தனர். ஏணியைச் சார்த்தி வீட்டிற்குள்ளே முற்றத்தின் வழியே இறங்கினர்கள். யாரேனும் சிலர் அங்கே இருத்தல் கூடுமென்பது அவர்கள் எண்ணம். விளக்கை ஏற்றிப் பார்த்தார்கள். அவர்கள் கண்ணில் ஒருவரும் படவில்லை. அப்பால் ஓரிடத்தில் ஒரு கிழவி மட்டும் படுத்திருப்பதைக் கண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/81&oldid=881287" இலிருந்து மீள்விக்கப்பட்டது