பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 கிழவியோ அன்றிரவு ஒரு கிமிடமும் துங்கவில்லே. திருடர்கள் வந்ததை அவள் அறிந்துகொண்டு, கூச்சலிடாமல் துங்குகிறவளைப் போலவே சிறிதும் படபடப்பின்றிப் படுத் திருந்தாள். திருடர்கள் அவளை அணுகி எழுப்பினர்கள். அவள் திடீரென்று திடுக்கிட்டு எழுபவள்போல எழுந்து, நீங்கள் யார் ? தெரியவில்லையே' என்ருள். திருடர்கள்: உன்னைத்தவிர இங்கே இன்னும் யார் யார் இருக்கிருர்கள் ? அதை முதலில் சொல்லிவிடு. கூச்சல் போடாதே, போட்டால் உடனே உன் கழுத்தைத் திருகிக் கொன்றுவிடுவோம். இந்த வீட்டிலுள்ள பணத்தைத் திருடிக் கொண்டு போவதற்காகவே நாங்கள் வந்திருக்கிருேம். கிழவி: அப்படியா, நல்லது; அப்படித்தான் செய்ய வேணும்! அப்படித்தான் செய்யவேணும்! நல்ல முடிவு செய்தீர்கள். கிழவி இவ்விதம் சொல்லிக்கொண்டே சிரித்தாள். திருடர்கள்: என்ன பாட்டி? எங்களை ஏளனம் செய்கிருயே! கிழவி: இல்லை; இல்லை. எதற்காக உங்களை நான் ஏளனம் செய்கிறேன்? இந்தி விட்டுப் பிள்ளைகள் செய்யும் கொடுமைகளை என்னல் பிொறுக்கமுடியவில்லை. நான் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன். வேளைக்குச் சோறு போடுவதில்லை; கட்டுவதற்குப் புடைவை வாங்கித் தருவ தில்லை; ஏதாவது வேண்டுமென்று கேட்டால் என்னைக் கோபித்துக் கொள்ளுகிருர்கள்; சில சமயங்களில் அடித்தும் விடுகிருர்கள்; இதனுல் ஒரு நாளைக்கு நூறு தடவை என் உயிர் போய்ப்போய் வருகிறது. எப்படியோ நாளைக் கடத்திக் கொண்டு வருகிறேன். இதைக் காட்டிலும் உங்கள் கையால் மரணம் நேரிட்டால் அதுவே எனக்கு நல்லது. யாருக்காக நான் இனி இவ்வுலகத்தில் இருக்கவேண்டும்? இந்தப் பாவிகள் என்னைப் படுத்திவைக்கும் பாட்டுக்கு இந்தப் பணத்தை எந்த மகராசனுவது வந்து வாரிக்கொண்டு த-சோ-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/82&oldid=881290" இலிருந்து மீள்விக்கப்பட்டது