பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 போகமாட்டானவென்று என் வயிறெரிய ஒவ்வொரு நாளும் மனத்திற்குள் வேண்டிக்கொண்டு இருந்தேன். நல்ல வேளை யாக இன்று நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். திருடர்கள் இதைக்கேட்டு மிக்க வியப்படைந்தார்கள். அவர்களுள் சிலருக்கு மனதிற்குள் சிறிது இரக்கமும் உண்டாயிற்று. திருடர்கள்: இங்கே இன்னும் யார் இருக்கிறர்கள்? கிழவி: நான் மட்டுமே இருக்கிறேன். இதிலேயே பார்த்துக்கொள்ளுங்கள். ஏதடா, கிழவி தனியே இருக் கிருளே! அவளுக்கு யாராவது துணையாக இருக்க வேண்டாமா!' என்றுகூட அவர்கள் கினைக்கவில்லை. அவர்கள் மட்டும் திருமண விருந்து சாப்பிடுவதற்குப்போய் விட்டார்கள். எனக்கோ இங்கே கண்ணுங் தெரியவில்லை; காதும் கேட்கவில்லை; காலோ தள்ளாடுகிறது. இந்த நிலையில் நாளுகச் சமைத்துக்கொண்டு எப்படிச் சாப்பிடுவது? இந்த நான்குநாளாக ஆகாரமே இல்லை; வயிற்றைப்பிடித்துக் கொண்டு தெய்வமே என்று கிடக்கிறேன். ஒவ்வொரு கணமும் சாபம் இட்டுக்கொண்டும் இருக்கிறேன். அந்தச் சாபத்தின் பலளுகத்தான் கடவுள் உங்களை அனுப்பியிருக்கிருர், வேணும், நன்ருக வேணும் இங்கே ஒரு துரும்பைக்கூட நீங்கள் பாக்கி வைக்காமல் எடுத்துக்கொண்டு போங்கள்! அப்பால் இவர்கள் சோற்றுக்கும் தண்ணிருக்கும் என்னைப் போலவே திண்டாட வேணும்! அதை நான் கண்ணுலே பார்க்கவேணும்! திருடர்கள்: அவர்கள் பணத்தை எங்கே வைத்திருக் கிருர்கள் தெரியுமா? கிழவி: தெரியாமல் என்ன? நன்ருகத் தெரியும். என் வீட்டுக்காரர் சம்பாதித்த சொத்துத்தானே இவ்வளவும். நான் தான் இத்தனை பணத்தையும் ஆண்டுகொண்டிருந்தேன். இப்பொழுது கண்டல் வண்டல்களெல்லாம் அதிகாரத்துக்கு வந்துவிட்டன! ஏனென்று கேட்பார் இல்லாமல் நான் நிற்கிறேன். i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/83&oldid=881291" இலிருந்து மீள்விக்கப்பட்டது