பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மார்கோ போலோவும் தமிழ் நாடும் பன்மொழிப் புலவர் திரு. தெ. பொ. மீனுட்சிசுந்தானுர், எம். ஏ , பி எல். எம். ஒ. எல். (மார்கோ போலோ 18ஆம் நூற்ருண்டில் தமிழ் வாழ்க்கையைப்பற்றி எழுதிவைத்த குறிப்புக்கள்) so இந்தியாவைச் செல்வப் புதையல் என மேட்ைடார் கருதி வந்தனர். பலர் அங்கிருந்து இங்கு வந்து, இந்த நாட்டினைப் பற்றிப் பல குறிப்புக்கள் எழுதிவைத்துள்ளனர். அலெக்ஸாண் டருக்குப்பின் இந்த நாட்டினேடு மேட்ைடின் தொடர்பு வளர்ந்தது. உரோமப் பேரரசு சாய்ந்ததும், மேட்ைடில் இருள் மூடியது. இந்திய வெறிகொண்டு .ெ க | ல ம் ப. சு. ம் வாஸ்கோடகாமாவும் புறப்படுவதற்குமுன், கீழ் நாடுகளைப் பற்றிய பேரவாவினை மேனுட்டில் கிண்டியவர் மார்கோபோலோ என்பவராவர். இவர் இத்தாலியில் வெனிஸ் மாநகரத்தில் 1254 இல் பிறந்தார். இவருடைய தந்தையும் சிறிய தந்தையும் உயர்குடியிற் பிறந்த வணிகர்கள். 1260இல் இவ்விருவரும் சீனுவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்; இரண்டாம் முறை இவர்கள் 1271 இல் புறப்பட்டபோது மார்கோபோலோ வையும் அழைத்துக்கொண்டு சென்றனர்; 24ஆண்டுகள் சுற்றியபின் 1295 இல் ஊர் திரும்பினர். ஜெளுேவாவுக்கும் வெனிசுக்கும் நடந்த போரில், மார்கோபோலோ சிறைப்பட்டார். ஆனல் வெற்றி வெறியால் தலைமயங்காமல், ஒரு நன்மை செய்தனர் ஜெனேவா நகரத்தினர்; மார்கோ போலோ கூறும் கதைகளை எல்லாம் ருஸ்தி செல்லோ என்பவரைக் கொண்டு எழுதுவித் தனர். நோபெல் பரிசு பெற்ற என்ற அம்மையார் இவரை முந்த முதல் தோன்றிய உலகக் குடிமகன் (First World Citizen) என்பர். யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனக் கொண்டு மேட்ைடில் இருந்து புறப்பட்டுக் கீழ் நாடெல்லாம் சுற்றி வந்த ஒரு பரந்த உள்ளம். கண்டதன் எல்லாம் குழந்தை மனத்தோடு கண்டு களித்த ஊக்கம், இதனை எல்லாருக்கும் சொல்லவேண்டும் எனப் பொங்கி எழுந்த அன்பு இவையே இவர் நூலே இன்னும் வாழ்விக் கின்றன. சீனப் பேரரசர் குப்லாகானப் பற்றி இவர் எழுதியன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/86&oldid=881295" இலிருந்து மீள்விக்கப்பட்டது