பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 புராணம்போல் ஆய்விட்டன. இவர், நம் தமிழ் நாட்டிற்கும் வந்தனர். இவர் கண்டவற்றை எறக்குறைய எழுநூறு ஆண்டுகளுக்குப் பின், நாம் இன்று படிப்பது இன்பந்தருவ தொன்ரும். ேசாழ ப் பே ர ர சு வீழத் தொடங்கியபோது கட்டற்றுக் கிடந்த தமிழ் நாட்டினையே இவர் கண்டார். தமிழ் நாட்டினை 'மாபர்' என்று அரேபியக் கப்பலோட்டிகள் வழங்கிவந்தனர். சுந்தரபாண்டியன் சீரும் சிறப்பும் பெற்ற காலம் அது. தமிழ் நாட்டினைப் பற்றி மார்கோ போலோ எழுதியுள்ளதனைக் கீழே மொழிபெயர்த்துத் தருகின்ருேம். "இலங்கைத்தீவினைவிட்டு மேற்காக 96 கிலோமீட்டர்கள் (60 மைல்) கப்பலில் போனதும் மாபர் (தமிழ் நாடு) என்ற பெரிய நாட்டினை அடைவீர். இஃது ஒரு தீவு அன்று பெரிய இந்திய கண்டத்தின் ஒரு பகுதியே ஆகும். உலகில் செல்வத் திலும் மாட்சிமையிலும் இது தலைசிறந்த நாடாகும். இதனை நான்கு அரசர்கள் ஆண்டு வருகின் ருர்கள். இவர்களில் தலையாயவன் பெயர், "செந்தர் பாண்டி'(சுந்தர பாண்டியன்) என்பதாம். இவனுடைய நாட்டில், மா பர்க்கும் ஜைலன் (சிலோன்-இலங்கை) தீவுக்கும் இடையே உள்ள வளைகுடா விலேதான் முத்துக் குளிக்கும் துறை உண்டு. அங்கே தண்ணிர் 12-15 ஆள் ஆழத்திற்குமேல் இராது; சில இடங்களில் 2 ஆள் ஆழத்திற்குமேல் இல்லை. முத்துக் குளிக்கும் தொழில் கீழே கண்டபடி நடைபெறுகிறது.' ஒரு சில வணிகர்கள் தனித்தனிக் கூட்டாக வர்த்தகக் குழுக்களாகச் சேர்வார்கள். இவர்கள் பல பல அளவில் உள்ள பல கப்பல்களையும் படகுகளையும் வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். இவற்றில் தரைப் பாரஞ் சாம்பிக் கயிறுகளும் உண்டு. இவற்றல் நங்கூரம் பாய்ச்சிவிட்டுக் கப்பலில் எளிதில் ஏறிக் கடலில் போகலாம். இந்தக் க ப் ப ல் க ள் முத்துள்ள சங்குகளைக் குளித்து எடுக்கும் கலையில் வல்லவர் களை வேலைக்கு அமர்த்திக்கொண்டு செல்லும். இந்தச் சங்கு களை வலைப் பை வழியாக மேலே கொண்டுவருவர். இந்தப் பைகள் முத்துக்குளிப்போர் உ ட ம் பி ல் கட்டியிருக்கும். இவர்கள் தண்ணிருக்குள் மூச்சுவிட முடியாதபோது, நீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/87&oldid=881297" இலிருந்து மீள்விக்கப்பட்டது