பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 முழு உரிமையோடு வந்தபின்னர்த் தன் தந்தையைப்போலத் தானும் பெரிய பண்டாரத்தை நிரப்ப ஆற்றலற்றுப் போனதாகத் தன் ஆளும் திறமையிலேயே குறையாய் முடியும் எனக்கருதியே இவ்வாறு மைந்தன் நடந்து வருகின்றனளும். இந்த மனப்போக்கின் காரணமாகத் தலைமுறை தலைமுறையாய் அளவற்ற செல்வம் சேர்ந்துவருகிறது என்று மக்கள் கருதுகிருர்கள்.' - "இந்த நாட்டில் குதிரைகள் பிறந்து வளர்ந்து பல்கிப் பெருகுவது இல்லை. அரசனும் அவனுடைய மூன்று தம்பி மாரும் ஆர்மஸ், தியூவார். பெசார், ஆதென் என்ற இடங்களி லுள்ள வணிகர்களிடமிருந்து குதிரைகள் வாங்கப் பெரும் பணத்தொகையைச் செலவிடுகின்ருர்கள். இந்த வணிகர்கள் 5,000 வரை குதிரைகளை இறக்குமதி செய்து, ஒவ்வொரு குதிரையையும் 500 பொன்னுக்கு விற்பதால் இந்த நாட்டிற்குக் குதிரைகளைக் கொண்டுவரும் வாணிகத்தில் பெரிய செல்வம் படைக்கின்ருர்கள். அந்தக் குதிரைகளைச் ச ரி வ ர ப் பாதுகாக்கவோ, வேண்டும் மருந்துகளைத் தரவோ தக்கவர்கள் இல்லாமையால் இது காரணமாகவே ஆண்டின் முடிவில் அவற்றில் 300 கூட உயிரோடு இருப்பது இல்லையாம் என்று பலர் கூறுகின்றனர். அதல்ை, அவற்றுக்குப் பதிலாக ஆண்டுதோறும் குதிரைகளைப் புதியனவாக வாங்கக் கட்டாயம் ஏற்படுகிறது. ஆல்ை, இந்த நாட்டின் தட்ப வெப்ப நிலை இந்த வகையான குதிரையினத்திற்குப் பிடிக்கவில்லை. அதனலேயே, இங்கே குதிரைகளைப் பிறக்கச் செய்வதும் வளர்ப்பதும் அருமை ஆகின்றன. அரிசி தவிர வேறு தானியங்கள் இந்த நாட்டில் விளையாமையால், இந்தக் குதிரை களுக்குத் தீனியாகச் சோறு தீற்றிய இறைச்சியையும் வேறு வகையாகச் சமைத்த உணவுகளையும் .ெ க டு த் து வருகின்றனர்.' * "கீழே கண்ட வியப்பான வழக்கம் இந்த நாட்டில் வழங்கி வருகிறது: குற்றவாளி, வழக்கு முடிந்ததும் கொலைத் தண்டனையை ஏற்றுக் கொலைக்களத்துக்குப் போகும் போது குறிப்பிட்ட தெய்வத்திற்குத் தன்னைப் பலியிட விரும்பினல் அதனைத் தெரிவித்து விடுவான். உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/91&oldid=881307" இலிருந்து மீள்விக்கப்பட்டது