பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 அவனுடைய உறவினரும் நண்பரும் ஒருவகை நாற்காலியில் அவனை அமர்த்தி அவன் கையில் நன்ருகக் கூர்தீட்டி உறுதியாக இருக்கும் பன்னிரண்டு கத்திகளைக் கொடுத்து விடுவார்கள்; நகரத்தைச் சுற்றி இவ்வாறு அவனைத் தூக்கிச் செல்லுவார்கள், உரத்த குரலில், இந்த வீரப் பெருமகன் கடவுள் மேலுள்ள அன்பின் மேலீட்டால் தானே தன்னைப் பலி கொடுக்கப் போகின்ருன் என்று பறையறைவார்கள். தண்டனை நிறைவேற்றும் களத்திற்கு வந்ததும், அவன் இரண்டு கத்திகளை விரைந்து எடுத்து, இந்தத் தெய்வத்திற்கு என்னைப் பலி கொடுக்கப் போகிறேன்' என உரத்துக் கூவி, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தொடையிலும் குத்திக் கொள்வான்; இரண்டை வயிற்றிலும் இரண்டை மார்பிலும் குத்திக்கொள்வான்; ஒவ்வொரு முறை குத்திக் கொள்ளும் போதும், முன் சொல்லிய சொற்களைச் சொல்லிக்கொண்டே ஒரு கத்தி தவிர மிகுதியை எல்லாம் இவ்வாறு தன் உடலின் பல உ று ப் பு க் க ளி லு ம் குத்திக்கொள்வான்; பிறகு கடைசிக் கத்தியை நெஞ்சிற்குத்திக் கொண்டு உடனே மாய்ந்துவிடுவான். இந்தக் காட்சி நடந்தேறி முடிந்ததும், அவனுடைய சுற்றத்தார் பெரிய விருப்போடும் களிப்போடும் சென்று அவனுடைய உடலை நெருப்பிற்கு இரையாக்குவர். அவனுடைய மனைவி, தன் கணவன் மேலுள்ள அன்பு காரணமாக அந்தத் தீயில் விழுந்து அவைேடு சாம்பராவாள். இத்தகைய உறுதிப்பாட்டினைக் காட்டும் பெண்களைச் சமுதாயம் மிகவும் பாராட்டுகிறது. அவ்வாறு செய்ய அஞ்சும் பெண்களையோ மிகவும் பழிக்கின்றது.' / அருஞ்சொற்பொருள் : இம்மை - இப்பிறவி, மறுமை - மறுபிறவி, திருமேனி - உடல்; உடனுறை சுற்றம் - எப்பொழுதும் தன்னே டிருக்கும் சுற்றம்; சாம்பர் - சாம்பல்; தீற்றிய - கலந்த; விருப்பு - பெருமிதம். 轟 வினுக்கள் : - 1. ஜெளுேவா நகரத்தினர் செய்த நன்மை யாது ? 2. மார்கோ போலோ எழுதிய நூல், கிலேத்து வாழ்வதற்குக் காரணங்கள் எவை ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/92&oldid=881309" இலிருந்து மீள்விக்கப்பட்டது