பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

197


கோழி ஓட்டத் தெரியாதவன் கொக்கு வாரியா?

கோழி ஒட்டினாலும் கும்பினிக்கு ஒட்டு.

(கும்பினி-East India Company.)

கோழிக் கறி என்றதும் கொண்டாடிக் கொண்டதும் கீரைத் தண்டாணம் அடாசப்பா; கீரைத் தண்டாணம் அடாசு.

(அடா.)

கோழிக் கறி கொடுத்துக் குயில் கறி வாங்கினாற் போல.

கோழிக் காய்ச்சல், வேசைக் காய்ச்சல். 10065


கோழிக் காய்ச்சலும் குண்டன் காய்ச்சலும் விடா.

கோழிக்குக் கொண்டை அழகு; குருவிக்கு மூக்கு அழகு.

கோழிக் குஞ்சுக்குப் பால் கொடுத்ததுபோல.

கோழி களவு போனால் ஆடு வெட்டிப் பலி இடுகிறதா?

(பொங்கல் இடுகிறதா?)

கோழி கவிழ்க்கும் போதே கூடக் கவிழ்த்து கொள்ளுகிறாயே. 10070


கோழி கறுப்பு ஆனால் அதன் முட்டையும் கறுப்பா?

கோழி குஞ்சிலும், அவரைக்காய் பிஞ்சிலும்.

கோழி குஞ்சுக்குப் பால் கொடுக்குமா?

கோழி குருடு ஆனாலும் சாறு மணக்காது போகுமா?

கோழி கூப்பிட்டு விடிகிறதா? நாய் குரைத்து விடிகிறதா? 10075

(விடியுமா?)


கோழி கூவாவிட்டால் விடியாதா?

கோழி கூவிப் பொழுது புலர்ந்தது.

(பொழுது விடியுமா?)

கோழி கூவுகிறதற்கு நாழிகை தெரிகிறது போல.

கோழி கொடுத்துக் குரலும் அழுகிறதா?

(அழிகிறது.)

கோழி கொடுத்துக் குரலும் பறிகொடுத்தது போல. 10080


கோழி கொரிப்பது போல் சாப்பிடுகின்றான்.

கோழி கொழுத்தால் முட்டை இடாது.

கோழி சிறகால் குஞ்சுகளைக் காப்பது போல.

கோழித் திருடியும் கூடி அழுகிறாள்.

கோழி தட்டிக் கூவுமா? 10085


கோழி திருடிக் கூடக் குலாவுகிறான்.

கோழி திருடிய கள்ளனும் கூட நின்று குலாவுகிறான்.