பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116



கவி

கழிக்கரை

கவி = குரங்கு, வால்மீகி, பாட்டு, புலவன், குரு, ஞானி
கவிகை = குடை, ஈகை, வளைவு
கவிதை = பாட்டு
கவித்தம் = விளாமரம். கைமுட்டி
கவிப்பர் = வணிகருள் ஒரு ஜாதியினர்
கவிப்பு = குடை, மனம் பற்றுகை
கவிர் = முள் முருக்கு
கவின் = அழகு
களீரம் = அலரி
கவுசணம் = கோவணம்
கவுசனை=உறை
கவுத்துவம் = வஞ்சகம்
கவுந்தியர் = முனிவர்
கவுமாரம் = இளமை
கவுளி = பல்லி, தென்னை
கவுள் = யானைக் கதுப்பு, பக்கம், கன்னம்
கவுனி = கோட்டை வாயில்
கவேரகன்னி = காவேரி
கவை = காடு, வேலை, இரட்டை, மரக்கப்பு, காரியம், ஆயில்ய நாள், பிளவு
கவைதல் = மூடுதல், மொய்த்தல்
கவைத்தல் = உளதாதல், அணைத்தல்
கவைத்தாள் = நண்டு, பிளவு பட்ட கால்
கவைமுள் = வேலமுள்
கவ்வை = பழிச்சொல், துன்பம்
கழகம் = கல்விபயில் இடம், சூது, சூதாடும் இடம், படை, மல்பயில் இடம், ஓலக்கம்
கழங்கு=கழற்சிக்காய் ஆட்டம், கழற்சிக்காய், வெறியாடல்
கழஞ்சு = பன்னிரண்டு பண எடை கொண்ட அளவு
கழப்பு=சோம்பல்
கழல் = கால்செருப்பு, வீரத் தண்டை கழங்கு, சிலம்பு
கழறுதல் = இடித்துக் கூறுதல், சொல்லுதல்
கழற்று = உறுதி மொழி
கழற்றுரை = கடிந்துமொழிதல்
கழாயர் =கழைக்கூத்தாடிகள்
கழாய் = கழுகு, மூங்கில்
கழால் = களைதல், கழுவுதல்
கழி = கடல், கயிறு, உப்பளம், மாமிசம், கோல், மிகுதி
கழிக்கரை = கடற்கரை