பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கழிதல்

117

களாசம்



கழிதல் = ஒழிதல், வருந்துதல், செல்லுதல், வெளிப்படுதல்
கழிமுகம்=அருவி
கழியர் = பரதவர்
கழு=கழுகு, கழுமரம்
கழுக்கடை = கழுமுள், சூலம்
கழுக்காணி = உலக்கை, அறிவற்றவன்
கழுது = பேய், வண்டு, பரண்
கழுநீர் = ஆம்பல், குவளை, செங்கழுநீர் மலர்
கழுந்து = உலக்கை முனை, முரட்டுத்தனம்
கழுமம் = குற்றம்
கழுமலம் = சீர்காழிப்பதி
கழுமல் = மயக்கம், நிறைவு, மிகுதி
கழுமுதல் = நிறைதல், மயங்குதல், திரளுதல், கலத்தல்
கழுமுள் = ஈட்டி, சூலம், மாதுளை
கழுவாய் = பிராயச்சித்தம்
கழை = மூங்கில், கரும்பு, ஒடக்கோல், புனர்ப்பூசநாள்
களகண்டம் = அன்னம், குயில்
களகம் = நெற்கதிர், அன்னம், பெருச்சாளி, சுண்ணச்சாந்து
களங்கம் = அடையாளம், அழுக்கு, கறுப்பு, குற்றம், களிம்பு
களங்கன் = சந்திரன்
களஞ்சியம் = பண்டகசாலை
களதம் = பெருச்சாளி
களத்திரம் = மனைவி
களபம் = யானை, கலவைச் சாந்து, யானைக் கன்று
களமர் = மருத நில மக்கள், உழவர், வீரர்
களம்= சபை, நெற்களம், கருமை, மேகம், இடம், போர்க் களம், வஞ்சகம், கழுத்து, விடம், இன்னோசை, கறுப்பு, யாகசாலை, கண்டம்
களம்வேட்டல் = களவேள்வி செய்தல்
களரி = அரங்கம், காடு, போர்க்களம், களர் நிலம், சபை
களர் = உப்பு நிலம், கறுப்பு, சேற்று நிலம், கூட்டம்
களவன் = நண்டு, திருடன்
களவேள்வி = போர்களத்தில் பேய்க்கு உணவு அளித்தல்
களாசம் = பிரம்பு