பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலி

253

நுண்ணியா்



நீலி = காளி, பார்வதி, கருநிறம், துஷ்டி நீலகண்டன் = ஈஸ்வரன், நீலமேனியன், விஷ்ணு நீலாேற்பவம் = கருங்குவளை நீவாரம் = குலநெல், வன நெல் நீவி = காெய்சகம், சிலை, மூலதனம் நீவுதல் = நீக்குதல், காேதுதல், நடத்தல், துடைத்தல், அறுத்தல், கைவிடல், அழித்தல், பூசுதல், தடவிக்காெடுத்தல், பரப்புதல் நீளம் = பறவைக்கூடு நீறு = சாம்பல், விபூதி

நு


நுகம் = பாரம், வலி, கணையமரம், நுகத்தடி, நடுவுநிலைமை நுகா்ச்சி = உணவு, அனுபவம் நுகா்தல் = அனுபவித்தல், புசித்தல், செய்தல், அருந்துதல் நுகும்பு = பனையின் இளங்காய், குருத்து, ஓலை நுகைதல் = தளா்தல், இளகுதல் நுகைவு = இளக்கம், தளா்வு, பாெருளுதவி நுங்குதல் = விீழுங்குதல், உண்ணுதல், கைக்காெள்ளல் நுங்கை = உன் தங்கை, உன் தாய் நுசுப்பு = இடை நுடக்குதல் = கழுவுதல், துவட்டுதல், மாய்த்தல், கரைத்தல், மடக்குதல் நுடங்குதல் = துவளுதல், அசைதல், அடங்குதல் நுணங்கு = நுண்மை, தேமல் நுணங்குதல் = அசைதல், நுட்பமாதல், வாடுதல், துவளுதல், வளைதல், செறிதல் நுணல் = தவளை நுணாவுதல் = தடவிக்தெரிதல் நுணித்தல் = கூர்மை ஆக்குதல், பொடியாக்குதல், நுணுகி ஆராய்தல நுணுகுதல் = நுட்பார்தல், கூா்மையாதல்

நுண்ணியர் = அறிவுடையாோ், மந்திாிகள்