பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நுதலணி

254

நூழிலாட்டு



நுதலணி = நெற்றிச் சுட்டி,ஒரு நகை நுதலல் = கருதல், குறித்தல் நுதலுதல் = தோற்றுவித்தல், கூறுதல், கருதுதல் நுதல் = நெற்றி, புருவம், தலை, மேலிடம் நுதற்கண் = நெற்றிக்கண் நுதனாட்டி = துர்க்கை நுதி = முளை, வணக்கம், முன், கூர்மை நுதித்தல் = அவித்தல், அழித்தல், நீக்குதல் நுதுத்தல் =அடக்கல் நுதுப்பு = தணிப்பு நுந்துதல் = தூண்டுதல் நுந்தை ÷ உம் தந்தை நுமர் = உம்மவர் நும்பி = உன் தம்பி நும்மோர் = உம்மவர் நுவணை = தினைமா, நுண்மை, கல்வி நூல் நுவலல் = கூறுதல் விருப்பம் நுவறுதல் = அசாவுதல் நுழுத்தல் = நுழைதல், பதுங்கல், முடித்தல் நுழை = பலகணி, துவாரம், நுண்மை, சிறுவழி, குகை நுழைபுலம் = நுண்ணறிவு நுளம்பு= கொசுகு, மின்மினி நுளையர் நெய்தல் நில மாக்கள், ஈனர் நுனித்தல் = உற்று ஆராய்தல், கூராக்கல், கூர்ந்நு நோக்குதல் நுனை = முனை

நூ

நூ = எள்ளிளங்காய், எள், யானை, ஆபரணம் நூக்குதல் = செலுத்தல், தள்ளுதல், பொடியாக்குதல், ஊசலாடல், எறிதல், தூண்டுதல், சாத்துதல் நூங்கு = பெருமை, மிகுதி நூபுரம் = காற்சிலம்பு நூலறிவு = கல்வி அறிவு நூலோர் = படித்தவர், அறிஞர் நூல் = பஞ்சி நூல், இழை, கல்வி நூல், ஆலோசனை, சாஸ்திரம், தாலி, ஆகமம் நூல் வெண் மாடம் = கூடாரம் நூவு = எள் நூழிலாட்டு = கொன்று குவித்தல்