பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாக்கை

351

யாழல்


யாக்கை = உடல், கட்டுதல் யாங்கண் = எவ்விடம் யாங்கு = எவ்விடம் யாகம் = பிச்சை யாசகன் = தரித்திரன் யாஞ்ஞசேதி = திரௌபதி யாட்டை = ஓராண்டு காலம் யாணர் = அழகு, கம்மாளர், நன்மை, புதுமை, செல்வ வருவாய், புதுவருவாய், தச்சர், வளமை, செல்வம் யாண்டு = எங்கு, வருஷம், எவ்விடம் யாண்டை = எவ்விடம் யாண் = அழகு யாதசாம்பதி = வருணன் யாதபதி = கடல், வருணன் யாதவம் = பசுக் கூட்டம் யாதவன் = கிருஷ்ணன், இடையன், யது வம்சத்தவன் யாதவி = குந்தி யாதனம் = கப்பம், கப்பல் யாதனா சரீரம் = நரகர் சரீரம் யாதனை = மிக்க வேதனை யாதி = ஞாபகம் யாது = ஞாபகம், பிரகாசம், இராக்கதன் யாது தானன் = இராக்கதன் யாதும் = சிறிதும் யாத்தல் = கட்டல் யாத்திரை = திருவிழா, படை எழுச்சி, நடத்தல், பயணம், கடற்செலவு யாபனம் = பொழுது போக்குதல், போக்குதல் யாப்பியம் = இகழ்ச்சி, அதமம் யாப்பு = கட்டு, செய்யுள் உறுதி யாப்புறவு = பொருத்தம், ஆராய்வு, தகுதி, கேள்வி யாப்புறுதல் = வலியுறுத்தல் யாமசரிதன் = அரக்கன் யாமக் கோட்டம் = அந்தப்புரம் யாமம் = தெற்கு, ஒருவகை மேளம், இராத்திரி, 7½ நாழிகை நேரம், நள்ளிரவு யாமளம் = பச்சை, ஒருவகை சாத்திரம் யமனை = காளி, உமை யாமியம் = சந்தனமரம், தெற்கு யாமினி = இரவு யாமை = ஆமை யாய் = நாய், தாய் யாவகம் = செம்பஞ்சு யாவண் = எவ்விடம் யாவதும் = சிறிதும், எல்லாம் யாழல் = கறையான்