பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாழோர்கூட்டம்

352

யூதநாதன்


யாழோர்கூட்டம் = கந்தருவமணம்
யாழ் = அசுவபதி, திருவாதிரை, வீணை, மிதுனராசி
யாழ்ப்பாணர் = யாழில்வல்ல பாடகர்
யாளி = யானை போன்ற ஒரு வகை மிருகம், (சிங்கத்தையும் கொல்ல வல்லது) சிங்கம்
யானம் = மரக்கலம், வாகனம், பல்லக்கு, போதல், கள்
யானைக்கண் = இலைகளில் காய்களில் விழும் புள்ளி
யானைத்தீ = பெரும்பசி
யானைவாரி = யானைகட்டும் இடம்

யு




யுகபத்திரிகை = அசோக மரம்
யுகம் = இரட்டை, நீடிய கால அளவை, நுகத்தடி, பூமி
யுகளம் = இரட்டை
யுகாதி = வருஷாரம்பம், கடவுள், அருகன், காந்தம்
யுக்தி = பொருத்தம், கூரிய அறிவு
யுக்மம் = இரட்டை
யுதகம் = இரண்டு ஐயம், சம்பந்தம், நன்கொடை
யுக்தம் = தகுதி,
யுதிட்டிரன் = தருமராசன்
யுத்தசன்னத்தன் = போர்க்குத் தயாராய் இருப்பவன்
யுத்தசாரம் = குதிரை
யுத்தரங்கன் = குமரன்
யுத்தம் = உசிதம், போர்
யுத்தி = பொருத்தம், வழக்கம், உபாயம், நியாயம், அனுமானம்
யுயு = குதிரை
யுவதி = இளம் பெண்
யுவன் = வாலிபன்

யூ




யூகம் = ஒரு புல், கருங்குரங்கு, படை, விவேகம், யோசனை, படைவகுப்பு, அறிவு, தருக்கம்
யூகி = விவேகி
யூகை = பேன், கல்வி
யூதநாதன் = யானைக்கூட்டத்தில் தலைமையானை