பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுபஞ்சகாவியம்

418

தாது


  
சிறுபஞ்சகாவியம்(5) = சூளாமணி, நீலகேசித் தெருட்டு, உதயணன் கதை, யசோதரகாவியம், நாககுமார காவியம்.

சீ


சீவாவத்தை (3) = சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி
 

சு


சுடர்(3) = சந்திரன், சூரியன், அக்னி

சுவை(6) = கைப்பு, தித்திப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு.

சூ


சூரியர் (12) = தாத்துரு, சர்க்கரன், அரியமன், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான், திவச்சுவான், பூடன், சவித்துரு, துவட்டா (துவாதசாதித்தர்)
 
சூரியன் குதிரைகள் (7) = காயத்திரி, பிருகதி, உட்டிணிக்கு, சகதி, திருட்டிப்பு, அநுட்டிப்பு, பந்தி, (சப்த குதிரைகள்)
 

ஞா


ஞானம்(2) = அபரஞானம், பரஞானம்

ஞானவகை(4) = கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல்.



தத்துவம்(96) = அன்மதுவம் 24, நாடி 10, அவத்தை 5, மலம் 3, குணம் 3, விகாரம் 8, ஆதாயம் 6, தாது 7, வாயு 10, கோசம் 5, வாயில் 9.

தந்தையர்(5) = பிறப்பித்தோன், கற்பித்தோன், மண முடிப்பித்தோன், அன்னந் தந்தோன், ஆபத்துக்குதவினோன்.

தமிழ்(3) = இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் .

தரு(5) = அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம், பஞ்சதரு

தலைவள்ளல் (7) = சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன், (முதல் எழு வள்ளல்கள்)

தா


தாது(7) = இரதம், இரத்தம், சுக்கிலம், மூளை, தசை, எலும்பு, தோல், சப்ததாதுக்கள்